வைல்ட்கார்ட் எண்ட்ரி'ஆ? போஸ்டருடன் உறுதி செய்த ஹாட்ஸ்டார் !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகை ஆயிஷா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் தற்போது விளையாடி வருகின்றனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர். மாடல் குயின்சி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இந்நிலையில், டிஸ்னி ஹாட்ஸ்டார் ட்விட்டர் பக்கத்தில் புதியதாக ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி ஆக இருப்பது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த போட்டியாளர் யார் என்பதை தற்போது அறிவிக்கவில்லை. ஒரு திரையுலக நட்சத்திரம் என்றும் அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் கண்டிப்பாக ஒரு பிரபலம் தான் பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே வரப் போகிறார் என்பது உறுதியாகி தெரிகிறது.
இந்நிலையில், அஞ்சலி நடிப்பில் Fall டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இதன் போஸ்டரில் அஞ்சலியின் கட் அவுட்டை தான் பிக்பாஸ் எண்ட்ரியாக போட்டுள்ளனர் என்றும். இதன் ப்ரோமோஷனுக்காக அஞ்சலி வீட்டிற்குள் போவார் என்றும் சொல்லப்படுகிறது.
எத்தனை பேரு கரெக்ட் ஆ Guess பண்றீங்கன்னு பாப்போம்🤔#BiggBossTamil #KamalHaasan #DisneyplushotstarTamil pic.twitter.com/OgT48Q19Wa
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) December 7, 2022