Viral Video: ஜெய் காதலால் சினிமா வாழ்க்கை பாழாய் போனதா? மனம் திறந்து பேசிய அஞ்சலி !
இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக 2007ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பின்னர், இவர் நடித்த ‘அங்காடி தெரு’ படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து, நடிகை அஞ்சலிக்கு அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைக்கவே, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. தமிழில், சுமார் 20 திரைப்படங்கள் வரை நடித்த அஞ்சலி திடீரென நடிப்பை ஓரம் கட்டிவிட்டு ஐதராபாத்’ல் செட்டில் ஆனார். சிறிய இடைவெளிக்கு பின்னர் சிங்கம் 2 படத்தில் ஒரு பாட்டிற்கு மட்டும் குத்தாட்டம் போட்டார்.
பின்னர், நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கிய அஞ்சலி, நாடோடிகள் 2 படத்தில் நடித்தார். தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கிய நிலையில், ‘பாவக்கதைகள்’ ‘நிசப்தம்’, ‘நவரசா’ உள்ளிட்ட சீரிஸ்களில் நடித்து வந்த நிலையில், அடுத்தடுத்து படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில், போட்டோக்கள், வீடியோக்கள் என அப்லோட் செய்து வருகிறார். தற்போது, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC15 திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். மேலும், பிரபல தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பில் உருவான ‘மச்சேர்லா நியோஜகவர்கம்’ என்ற படத்தில் நடிகை அஞ்சலி கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.
சமீபத்தில், நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதல் இருக்கிறது என்று பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அதற்கு ஏற்றார் போல ‘பலூன்’ படம் தயாரிப்பாளர் நந்தகுமார் ஒரு பேட்டியின் போது அஞ்சலியிடம் படத்தின் சீன்களை சொல்லும் போது அவருடைய பெயரை சொல்லி இயக்குநர் சினிஷ் கூப்பிட்டார். உடனே ஜெய்க்கு பயங்கர கோபம் வந்து நீங்கள் எப்படி அவர்களை பெயரை சொல்லி கூப்பிடலாம், ‘மேடம்’ என்று கூப்பிடுங்கள் என்று கண்டபடி சத்தம் போட்டு இருந்தார்.
பின்னர் அடுத்த நாளே இவர்கள் இருவரும் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்கள். பின் எப்படியோ ஜெய்யும், அஞ்சலியும் வைத்து படத்தை ஒரு வழியாக முடித்து வெளியே விடப்பட்டது என்று கூறி இருந்தார் தயாரிப்பாளர் நந்தகுமார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற அஞ்சலியிடம் ஜெய்யுடன் ஏற்பட்ட கிசு கிசு குறித்தும், அவரால் தான் சினிமா வாழ்க்கை பாழாய் போனது என்ற விமர்சனம் குறித்தும் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அஞ்சலி ‘நான் காதலிக்கிறேன் என்று எப்போதும் சொன்னது கிடையாது. எனக்கு சினிமாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே, என்னைப் பற்றி எழுதுபவர்கள் யாரை வைத்து எழுத வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து விடுவார்கள். ஆனால், அதைப் பற்றி நான் பேசியதும் இல்லை பேசப் போவதும் இல்லை இது போன்ற விஷயத்தை நான் செய்யவில்லை எனவே அதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.