அனிதா சம்பத் வெளியிட்ட புது வீட்டின் Home Tour வீடியோ.. வைரலாகும் வீடியோ..

Anitha sampath home tour video getting viral on social media

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் வரவேற்பு பெற்று வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தவர்களை பார்த்ததுண்டு. அந்த வரிசையில், தொகுப்பாளர்களும், செய்தி வாசிப்பாளர்களும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகளுக்கு இணையாக பேன் பாலோயர்ஸ் பெற்று பிரபலம் அடைவதும் தற்போது அரங்கேறி வருகிறது.

Anitha sampath home tour video getting viral on social media

இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளங்கள், ஆர்மி, fan page உருவாகி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, மணிமேகலை, DD, பிரியங்கா, கண்மணி, ரம்யா என பலரும் உள்ளனர். இதில் ஒரு சிலர் சினிமா மற்றும் சின்னதிரைகளில் நடிக்க ஆர்வம் காட்டியும் வருகின்றனர். அந்த வகையில், நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் அனிதா சம்பத்.

Anitha sampath home tour video getting viral on social media

தற்போது, சன் டிவியில் 6 மணி செய்திகள் மற்றும் வணக்கம் தமிழா நிகழ்ச்சிகளில் தோன்றி வருகிறார். இது மட்டுமின்றி, சர்க்கார், காலா, காப்பான், 2.0, ஆதித்யா வர்மா, உள்ளிட்ட படங்களில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். இப்படி பிரபலம் அடைந்த அனிதா சம்பத்திற்கு, பிக் பாஸ்’ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

Anitha sampath home tour video getting viral on social media

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலப்படமான விமர்சனங்கள் இவர் மீது வந்த போதிலும் அதை பற்றி பெரிதும் கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு சமீபத்தில் OTT தளத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிலும், இவரது சில வீடியோக்கள் செம வைரல் ஆனது. தற்போது தனக்கென்ற தனி யூடியூப் சேனல்’ம் நடத்தி வருகிறார்.

Anitha sampath home tour video getting viral on social media

2019ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான பிரபா என்பவரை திருமணம் செய்து கொண்ட அனிதா, இந்த ஜோடி பிக் பாஸ் பின்னர் மிக பிரபலம். அனிதாவிற்கு மேக்கப் மீது ஆர்வம் அதிகம், அதனை பற்றிய வீடியோக்களை அதிகம் பதிவிட்டு வருகிறார். மேலும், தனது சில போட்டோஷூட் புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Anitha sampath home tour video getting viral on social media

சமீபத்தில், சொந்த வீடு ஒன்றை தங்களது பெரும் முயற்சியால் வாங்கியுள்ளதையும், அதன் புகைப்படங்களையும் சந்தோசமாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் அந்த வீட்டின் புகைப்படங்களை பார்த்து, எங்களுக்கும் டிப்ஸ் குடுங்க என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதன் ஹோம் டூர் வீடியோவையும் கேட்டு வந்தனர்.

Anitha sampath home tour video getting viral on social media

இந்நிலையில், அனிதாவும் அவரது கணவரும் சேர்ந்து அவர்களது சொந்த வீட்டின் டூர் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். தான் இளம் வயதில் பட்ட கஷ்டம் பற்றி அனிதா மீண்டும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Share this post