சூர்யா படத்தில் அனிருத்திற்கு கிடைத்த புது வாய்ப்பு ! திடீரென விலகிய பிரபலம் !

Anirudh to play musical in surya siva next upcoming movie

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் அமோக வரவேற்பை பெற்று வருவதை தொடர்ந்து, பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் நடித்து வருகிறார்.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் வாடிவாசல் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். சென்னை ECR-ல் பிரம்மாண்ட செட் டெஸ்ட் ஷூட் நடந்து அதன் புகைப்படங்கள் செம வைரலாக பரவியது.

Anirudh to play musical in surya siva next upcoming movie

இதையடுத்து, சிறுத்தை, வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம் போன்ற படங்களை இயக்கிய சிவா உடன் அடுத்த படத்திற்கான கூட்டணி அமைக்க உள்ளார் சூர்யா. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார்.

Anirudh to play musical in surya siva next upcoming movie

இப்படத்திற்கு டி.இமான் இசையமைப்பார் என தகவல் வெளியான நிலையில், தற்போது இப்படத்தில் இருந்து இமான் விலகி, அவருக்கு பதில் அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் ஏற்கனவே சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் இயக்குனர் சிவா உடன் விவேகம் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post