காப்பி அடித்த அனிருத்?.. கலாய்த்து வருபவர்களுக்கு சிங்கள இசையமைப்பாளரின் நச் பதில்..!

anirudh-copying-devara-song-chamath-sangeeth-reply-

தமிழில் பல பிரமாண்ட பாடல்களை கைவசம் வைத்திருக்கும் இசையமைப்பாளர் அனிருத். இவர் அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் கூலி, முருகதாஸின் எஸ்கே 23, உள்ளிட்ட பல படங்களில் தற்போது இசையமைத்து வருகிறார்.

அதே நேரத்தில், ஹிந்தி, தெலுங்கு என மாற்ற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். தற்போது, ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார்.

anirudh-copying-devara-song-chamath-sangeeth-reply-

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது, தேவரா படத்தின் இரண்டாவது சிங்கிள் Chuttamalle பாடல் வெளியான நிலையில், அதில் உச்சகட்ட கவர்ச்சியில் ஜான்வி கபூர் இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு Manike Mage Hithe என்ற சிங்கள பாடல் பெரிய ஹிட் ஆனது. அந்த பாடலை கேட்டு நெட்டிசன்கள் அனிருத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். அதே டியூனை அப்படியே அப்பட்டமாக காப்பி அடித்திருக்கிறார் அனிருத் என நெட்டிசன்கள் தற்போது அனிருத்தை வறுத்து எடுத்து வருகின்றனர்.

anirudh-copying-devara-song-chamath-sangeeth-reply-

இந்நிலையில், மணிகே மகே இதே பாடலை இசையமைத்த சமத் சங்கீத் இதற்கு ஒரு பதிலை அளித்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் பிரபலம் இதை விமர்சித்த நிலையில், அந்த வீடியோவை சமத் சங்கீத் அவரது சோசியல் மீடியா பக்கத்தில் அனிருத்தின் படைப்புகளை எப்போதும் ரசிப்பவன் நான். என் பாடல் போன்று ஒரு பாடலை இசை அமைக்க அவருக்கு தூண்டுதலாக என் பாடல் அமைந்தது எனக்கு மகிழ்ச்சி தான் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் சமத் சங்கீத்தை பாராட்டி வருகிறார்கள்.

Share this post