நல்லா COPY PASTE செஞ்சிருக்கியேபா.. அனிருத்தை வறுத்தெடுத்து வீடியோவை வைரலாக்கும் நெட்டிசன்கள்..!

anirudh-copied-a-sinhala-song

தமிழில் பல பிரமாண்ட பாடல்களை கைவசம் வைத்திருக்கும் இசையமைப்பாளர் அனிருத். இவர் அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் கூலி, முருகதாஸின் எஸ்கே 23, உள்ளிட்ட பல படங்களில் தற்போது இசையமைத்து வருகிறார்.

அதே நேரத்தில், ஹிந்தி, தெலுங்கு என மாற்ற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். தற்போது, ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார்.

anirudh-copied-a-sinhala-song

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது, தேவரா படத்தின் இரண்டாவது சிங்கிள் Chuttamalle பாடல் வெளியான நிலையில், அதில் உச்சகட்ட கவர்ச்சியில் ஜான்வி கபூர் இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு Manike Mage Hithe என்ற சிங்கள பாடல் பெரிய ஹிட் ஆனது. அந்த பாடலை கேட்டு நெட்டிசன்கள் அனிருத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். அதே டியூனை அப்படியே அப்பட்டமாக காப்பி அடித்திருக்கிறார் அனிருத் என நெட்டிசன்கள் தற்போது அனிருத்தை வறுத்து எடுத்து வருகின்றனர்.

Share this post