பார்க்க அச்சு அசல் நயன்தாராவை போலவே இருக்கும் பிரபல தமிழ் பட நடிகை.. வைரல் போட்டோஸ்!
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். அடுத்ததாக கோல்ட், கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் இவர் நடிப்பில் திரைக்கு வரவிருக்கிறது. இதை தொடர்ந்து, இறைவன், நயன்தாரா75 ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில், பிரபல நடிகை ஒருவர் பார்ப்பதற்கு நடிகை நயன்தாரா போலவே உள்ளார் என சமீபகாலமாக ரசிகர்கள் கூறப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்ட சில புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்த ரசிகர்கள் பலரும், அவரை பார்க்க நயன்தாரா போலவே தான் இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். அந்த நடிகை வேறு யாருமில்லை என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா தான். இவரது சமீபத்திய சில புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஒரு நிமிஷம் நயன்தாரான்னு நெனச்சேன் என கூறி வருகின்றனர்.