சுஷாந்த் சிங் போல்.. பிரபல பிளாக்பஸ்டர் ஹிட் பட நடிகர் இறந்த நிலையில் பிணமாக மீட்பு..

Angamaly diaries movie actor sarath chandran found dead

கடந்த 2020ம் ஆண்டு பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங், மர்மமான முறையில் இறந்தது இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர் இறந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அவரது மரணத்திற்க்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறி வருகிறது. அவரது மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்னும் நடந்து வருகிறது.

Angamaly diaries movie actor sarath chandran found dead

இந்நிலையில், மலையாள திரையுலகில் நடந்துள்ள மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான அங்கமாலி டைரீஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் சரத் சந்திரன். இவர் தற்போது இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 37.

Angamaly diaries movie actor sarath chandran found dead

கொச்சியை சேர்ந்த சரத் சந்திரன், முதலில் ஐடி ஊழியராக பணியாற்றி வந்த இவர், சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாக அறிமுகமாகி பின்னர், படங்களில் நடிக்கத் தொடங்கினார். அனீஸ்யா என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி ஒரு மெக்ஸிகன் அபராதா, கூடே போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர், திடீரென மரணமடைந்து இருப்பது மலையாள திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Angamaly diaries movie actor sarath chandran found dead

இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. போலீசாரும் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சரத் சந்திரனின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this post