'ஆமா எனக்கு இப்டி நடந்துச்சு..' உண்மையை பகிரங்கமாக கூறிய தமிழ் நடிகை.. வாயடைத்து போன பயில்வான்..
நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல திறமைகளை கொண்டுவர் நடிகை ஆண்ட்ரியா. விளம்பர படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா, கண்ட நாள் முதல் என்னும் திரைப்படத்தில் சாதாரண கூட்டத்தில் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். பின்னர், பச்சைக்கிளி முத்துச்சரம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனைத் தொடர்ந்து, மங்காத்தா, சகுனி, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, உத்தம வில்லன், தரமணி, விஸ்வரூபம் 2 போன்ற திரைப்படங்களில் நடித்தார். முக்கியமாக, வடசென்னை திரைப்படத்தில் இவரது சந்திரா கதாபாத்திரம் செம வைரல் ஆனது. ஒரு போல்ட் கதாபாத்திரத்தில் நடித்த இவர், தொடர்ந்து, மாஸ்டர், அரண்மனை 3, வட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
மேலும், வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன, தங்கமகன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியிருந்தார். தற்போது, மாளிகை, பிசாசு 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில், நடிகை ஆண்ட்ரியா தனக்கு நடந்த கொடூரமான நிகழ்வு குறித்து வெளிப்படையாக கூறியிருந்தார்.
அந்த பேட்டியில், நடிகை ஆண்ட்ரியா நான் என்னுடைய அப்பாவுடன் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது என் மேல் யாரோ கை வைத்தார். என்னை தொடர்ந்து உரசவே, எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. இதை யாரிடமும் எதுவும் சொல்லாமல் நான் என்னுடைய அப்பா அருகில் சென்று உட்கார்ந்துவிட்டேன். இதை என்னுடைய அம்மாவிடம் கூட இதுவரை சொன்னதில்லை என பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
சினிமாவில் பல திரைப்படங்களில் போல்டான கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியாக்கே இந்த நிலையா என்று ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல நடிகைகள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். ஆனால், நடிகை ஆண்ட்ரியா எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் பேசியுள்ளார் என்று சர்ச்சை நாயகன் பயில்வான் ரங்கநாதன் ஆண்ட்ரியாவை பாராட்டியுள்ளார்.