செருப்பால் அடிப்பேன் நாயே… அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட நபர்; கமிஷனர் அலுவலகத்தில் கொந்தளித்த சனம் ஷெட்டி..!

anam-shetty-condemns-kolkata-woman-doctors-murder

கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்களும், பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை நடிகை சனம் ஷெட்டி கடுமையாக கண்டித்து பேசியுள்ளார்.

முன்னதாக சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சனம் ஷெட்டி பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் குறித்து சொல்வதற்கே கஷ்டமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளது. பெண்களை வெளியில் போகாதே இது போன்ற ஆடைகளை போடாதே, யாரையும் நம்பாதே என்று சொல்லி வளர்த்துக் கொண்டு இருக்கிறோம். இதை எவ்வளவு நாளைக்கு சொல்வது என கேள்வி எழுப்பி இருந்தார்.

anam-shetty-condemns-kolkata-woman-doctors-murder

பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு ஆண், பெண் பேதம் இன்றி எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு குடும்பத்திற்கு உள்ளேயும் கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தான் இருக்கிறது. மலையாள திரை உலகில் நடிகைகள் சந்திக்கும் பாலியல் சிக்கல் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சனம் ஷெட்டி ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த விவரம் எனக்கு தெரியாது.

anam-shetty-condemns-kolkata-woman-doctors-murder

ஆனால், இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். இதுபோன்று ஒரு அறிக்கையை அவர்கள் கொண்டு வந்ததற்கு ஹேமா அவர்களுக்கும் கேரளா அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் தமிழ் திரை உலகில் நடைபெறுவது இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. என்னுடைய சொந்த அனுபவத்திலும், நான் சொல்லி உள்ளேன். ஆனால், இது பற்றி அன்றே ஏன் சொல்லவில்லை என்று சொல்வார்கள். அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட நபரிடம் செருப்பால் அடிப்பேன் நாயே என்று நான் கூறி போனை கட் செய்த சம்பவங்கள் கூட நடந்து இருக்கிறது என்று அந்த பேட்டியில் சனம் ஷெட்டி பேசியிருந்தார்.

Share this post