Viral Video: பிக்பாஸ் வீட்டில் பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்தாரா அமுதவாணன்? சர்ச்சையை கிளப்பிய வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இந்த 6வது சீசனில் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர்கள் அசீம், அசல் கோளார், ராபர்ட் மாஸ்டர். இதில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து வருவதாக அசல் கோளார் மீது விமர்சனங்கள் எழுந்து வந்தது. மேலும், அவர் ஏவிக்ட் ஆனார். பின்னர், அசீம் தேவையற்ற வார்த்தைகள் உபயோகிப்பது, ஒருமையில் பேசுவது என சர்ச்சையில் சிக்கி வருகிறார். இதனால் அவருக்கு ஒரு முறை வார்னிங் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது, இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் சின்னத்திரை நகைச்சுவை நடிகர் அமுதவாணனும், தற்போது ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். இதற்கு காரணம் ஜனனி உடன் அவர் பழகும் விதம் தான். இதனை கமல்ஹாசன் முன்னிலையில் ஹவுஸ்மேட்ஸ் சுட்டிக்காட்டியும் அவர் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
தற்போது அமுதவாணன் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள பாத்ரூமில் பெண் போட்டியாளர் ஒருவர் குளிக்கும் போது வெளியே நிற்கும் அமுதவாணன், மைக்கை கழற்றி வைத்துவிட்டு, பாத்ரூம் இடைவெளியில் எட்டிப்பார்க்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. அப்போது அமுதவாணன் மைக்கை மாட்டுங்க என பிக்பாஸ் குரல் ஒலித்ததும் அவர் பதறும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.
அமுதவாணனின் இந்த அசிங்கமான செயலுக்கு பிக்பாஸ் ரசிகர்களும் நெட்டிசன்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் உள்ளே ஜனனி குளித்துக் கொண்டிருந்தார் என்று கூறுகின்றனர். சிலரோ அது ஜனனி அல்ல ஷிவின் என்று வாதிட்டு வருகின்றனர். ஜனனியோ, ஷிவினோ யாராக இருந்தாலும் அவர்கள் குளிப்பதை எட்டிப்பார்ப்பது தவறு, அதனால் அமுதவாணனை கமல்ஹாசன் கண்டிப்பதோடு மட்டுமின்றி அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பிக்பாஸ் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Indha #amuthavanan ivlo mosama behave panuvanu nenachu kooda pakala🤬🤬
— 𝘼𝙧𝙪𝙣🐼 (@opinier27) November 23, 2022
Anga ulla #Janany kulichitu irukanga Ivan gap velia pakraan clownn🤢🤢
Please RedCard kuduthu immediate a eliminate panunga..@ikamalhaasan 🟥🙏#RedCardToAmuthavanan #BiggBossTamil6 pic.twitter.com/WMWRgza6Oc