விக்ரமனை வீண்பழி கூறிய அமுதவாணன்: இந்த வார குறும்படம் இதோ!

amuthavanan fighting with vikraman for wrong reason kurumpadam video getting viral

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

amuthavanan fighting with vikraman for wrong reason kurumpadam video getting viral

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

amuthavanan fighting with vikraman for wrong reason kurumpadam video getting viral

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

amuthavanan fighting with vikraman for wrong reason kurumpadam video getting viral

21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், நேற்று ஷெரினா எவிக்ட் ஆகி வெளியேறினார்.

amuthavanan fighting with vikraman for wrong reason kurumpadam video getting viral

இந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கில் தினமும் சண்டை சச்சரவுகள் நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக அமுதவாணன் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரும் எதிர் அணியினர்களிடம் போடும் சண்டைகள் நியாயம் இல்லாதவை என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உள்ளே இருந்து வெளியே வரும் பொருட்களை எடுக்க இரு அணியில் உள்ளவர்களும் தயார் நிலையில் இருக்கும்போது விக்ரமன் தனது அணியினரை வெளியே வாருங்கள் என்று அறிவுரை கூறுகிறார்.

amuthavanan fighting with vikraman for wrong reason kurumpadam video getting viral

ஆனால், அமுதவாணன் மற்றும் விக்ரமன் இடையே நடந்த சண்டையின்போது விக்ரமன் தனது அணியை வெளியே வாருங்கள் என்று கூறவே இல்லை என அமுதவாணன் கூறுகிறார். இந்த சண்டை முற்றி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் நானே குறும்படம் போட சொல்கிறேன், நீங்கள் வெளியே வர சொல்லவே இல்லை என்று அமுதவாணன் அடித்துக் கூறுகிறார். ஆனால் விக்ரமன் தான் தனது அணியினர்களை வெளியே வாருங்கள் என்று கூறினேன் என்றும், அது மக்களுக்கு தெரியும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

amuthavanan fighting with vikraman for wrong reason kurumpadam video getting viral

இந்த நிலையில் கமல்ஹாசன் குறும்படம் போடுவதற்கு முன்பே நெட்டிசன்கள் குறும்படத்தை போட்டு வைரலாகி வருகின்றனர். அந்த வீடியோவில் விக்ரமன் தனது அணியினரை பின்னால் வாருங்கள் இப்படி இருந்தால் எப்படி அவர்கள் செல்வார்கள் என்று கூறுகிறார். அப்போது அமுதவாணனும் அருகில் தான் இருக்கின்றார். இதனை அடுத்து அமுதவாணனை இந்த வாரம் கமல்ஹாசன் வறுத்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post