Viral Video: மைக்கை கழட்டி வைத்து இரவில் பேசும் அமுதவாணன்-ஜனனி.. கடுப்பான பேன்ஸ்.. கமல் கண்டிப்பாரா?
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், நேற்று ஷெரினா எவிக்ட் ஆகி வெளியேறினார்.
நடிகர் கமல்ஹாசன் இன்றைய பிக்பாஸ் ஷோவில் முன் எப்போதும் இல்லாத வகையில் போட்டியாளர்களை எச்சரித்து இருக்கிறார். விதிகளை மதிப்பதில்லை, நேரத்திற்கு வருவதில்லை, வேறு மொழிகளில் பேசுகிறார்கள், எழுதி காட்டுகிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகளை சொன்ன கமல், ‘நானே ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பிவிடுவேன்’ என எச்சரித்து இருக்கிறார். இந்நிலையில், நேற்று ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் அமுதவாணன் – ஜனனி செய்து வரும் செயல்கள் ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது. அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் இலங்கை தமிழ் பெண் ஜனனி. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து ஜனனிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
அதேபோல் அமுதவாணன் விஜய் டிவியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவர்கள் இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் மைக்கை மாட்டாமல் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் கடுப்பாகி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஏற்கனவே செரினா, ஆயிஷா இருவரும் மலையாளத்தில் பேசி வந்ததுக்கு கமல் கண்டித்து இருந்தார். அதே போல் மைக்கை போடாமல் பேசியதற்கும் கடுமையாக கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இப்படி இருக்கும்போது அமுதவாணன் – ஜனனி இருவரும் மைக் போடாமல் பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு கமலஹாசன் கண்டிப்பாரா? இனிமேல் இந்த மாதிரி விதிமீறல் நடக்காமல் இருப்பதற்கு கடுமையான தண்டனை கொடுப்பாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
#Janany & #Amudhavanan had started doing this now frequently#Amudha is just a #VijayTv product whom the channel will save till last week#BiggBossTamil#BiggBossTamil6 pic.twitter.com/aCtrAG8sTf
— குருநாதா👁️ (@gurunathaa4) November 5, 2022
Dear @vijaytelevision requesting you to add subtitles when #Janany and #Amudhavanan speaking...
— Dr.Ilavarasi (@Ilavarisirk) November 4, 2022
Onum aha purila...ethula beep words Vera varthu 😮💨#BiggBossTamil6 pic.twitter.com/0znq8CDwXj
So #Amudhavanan stopped #Janany in participating the pool game...😮💨
— Dr.Ilavarasi (@Ilavarisirk) November 4, 2022
Even after he knows she is a basket ball player#BiggBossTamil6 pic.twitter.com/L55RsbnETn
Look at this Father #Amudhavanan & #Daughter #Janany ROMANCE 🤮🤮
— Gerun (@gerun1975) November 6, 2022
DISGUSTING 🤢
What a waste of opportunity #JAnany 😡😡😡
Go back to #Srilanka 🤮#BiggBossTamil6 pic.twitter.com/moH1nFoYQQ