BB ஜோடிகள் அப்றம் 'கல்யாணமா?'.. பிரியங்கா வெளியிட்ட அமீர் - பாவனியின் வைரலாகும் வீடியோ !

Amir pavni reddy shooting scenes from bb jodigal gettting viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 மூலம் பிரபலம் அடைந்தவர்கள் அமீர் - பாவனி. நிகழ்ச்சியில் இவர்கள் செய்த விஷயங்கள் இவர்களை காதலர்கள் என கிசுகிசுக்கும் அளவிற்கு மாறிவிட்டது.

Amir pavni reddy shooting scenes from bb jodigal gettting viral

ரெட்டை வால் குருவி, பாசமலர் போன்ற சீரியல் தொடர்களில் நடித்துள்ள பாவனி, சின்ன தம்பி சீரியல் தொடர் மூலம் பிரபலம் ஆகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Amir pavni reddy shooting scenes from bb jodigal gettting viral

இவர் தெலுங்கு சீரியல் நடிகர் பிரதீப் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், பிரதீப் எதிர்பாராத விதத்தில் தற்கொலை செய்து கொண்டது இவரை பெரிதும் பாதித்தது. அந்த சங்கடத்தில் இருந்து மீண்டு வந்து சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் கம் பேக் கொடுத்து வரும் பாவனி, அமீருடன் காதலில் இருப்பதாக தகவல்கள் உலா வருகிறது.

Amir pavni reddy shooting scenes from bb jodigal gettting viral

அமீர் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற பிரபல நிகழ்ச்சிகள் மூலம் நடன இயக்குனராக சின்னத்திரையில் வலம் வருபவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, அவ்வப்போது ஒன்றாக சுற்றி வரும் இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவது வழக்கம்.

Amir pavni reddy shooting scenes from bb jodigal gettting viral

இந்நிலையில், இவர்கள் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் இவர்கள் பங்கேற்றுள்ளனர். அந்த ஷூட்டிங்கில் இருந்து பிரியங்கா வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Amir pavni reddy shooting scenes from bb jodigal gettting viral

அதில், பாவனி - அமீர் இருவரிடம் கேள்வி கேட்ட பிரியங்கா ‘நிகழ்ச்சி முடியும் போது கல்யாணமா’ என கேட்டுள்ளார். அதற்கு பாவனி ‘இல்ல Friendship Band கட்ட போறேன்’ என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது..

Share this post