"குனிந்து பார்த்தது உங்க தப்பு"… குட்டை உடை சர்ச்சைக்கு அமலா பால் பதிலடி!
காதல் சர்ச்சைகளிலும் கிசுகசுகளிலும் அதிகம் சிக்கி விமர்சிக்கப்பட்டவர் தான் நடிகை அமலாபால். கேரளாவை சேர்ந்த மலையாள நடிகையான இவர் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே மோசமான ரோலில் நடித்து எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார்.
இதை எடுத்து அவரது மார்க்கெட் காலியாகி விடும் என பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. அதை அடுத்து தொடர்ந்து தனது முயற்சி கைவிடாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த அமலா பால் தொடர்ந்து மைனா , தெய்வத்திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட பல்வேறு சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்து நட்சத்திர நடிகை என்ற இடத்தை பிடித்தார்.
இதனிடையே இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதை எடுத்து சில பல காதல் சர்ச்சைகளையும் சந்தித்தார். மேலும் ரகசிய உறவுகளிலும் இருந்து வந்த அமலா பால் பின்னர் ஜெகத் தேசாய் என்பவருடன் ரகசியமாக காதலித்து திருமணத்திற்கு முன்னதாக கர்ப்பம் தரித்தார் .
அதன் பிறகு அண்மையில் தான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அமலாபால் தற்போது “லெவல் கிராஸ்” என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் அண்மையில் ரிலீஸ் ஆகியிருந்தது. அதன் ப்ரமோஷனுக்காக கல்லூரி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட அமலாபால் படு குட்டையான கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தார்.
அந்த லோநெக் உடையில் ஆபாசமாக மார்பகங்கள் தெரிய… தொடை கவர்ச்சியையும் ஹாட்டாக காட்டி. போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மோசமாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் நடிகை அமலாபால் பிரச்சனை என்னுடைய உடையில் இல்லை உங்களுடைய கேமராவில் தான் இருக்கிறது.
நான் எனக்கு வசதியான ஆடையை தான் அணிந்து வந்தேன். நான் அந்த நிகழ்ச்சியில் வந்த போதும் மாணவர்களுக்கு கூட அந்த உடையில் பிரச்சனையாக இருந்ததாக எனக்கு தெரியவில்லை. ஆனால், அதிக கேமராக்கள் கவர்ச்சியாக என்னை காட்சிப்படுத்தி விட்டார்கள். எனவே என்னுடைய உடையில் எந்த பிரச்சனையும் இல்லை… உங்கள் பார்வையில் தான் பிரச்சனை என மிகவும் கூலாக பதில் கொடுத்தார்.