மேடையில் அஜித்தை அசிங்கப்படுத்திய பிரபல தயாரிப்பாளர்.. பதிலுக்கு AK செய்த செயல்.. உண்மையை உடைத்த பயில்வான்!
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இதன் நடுவே, AK62 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியானது. பல ஆண்டுகள் கழித்து அஜித் துணிவு படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது.
இந்நிலையில், அஜித்தை மேடையில் அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர் பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ள வீடியோ செம வைரலாகி வருகிறது. விஜய்யை வைத்து குஷி, கில்லி, சிவகாசி போன்ற படங்களை தயாரித்த ஏ எம் ரத்னம் கில்லி படம் வெற்றியை கொண்டாடும் போது நிகழ்ச்சியில் அஜித் என்பவர் காணாமல் போய்விடுவார் என்று தெலுங்கில் பேசித்தள்ளினார்.
இதன்பின் 5 வருடம் காணாமல் போய் நஷ்டத்தால் படங்களை எடுக்காமல் நடுத்தெருவுக்கு வந்தார் ஏ எம் ரத்னம். இதனை அறிந்த அஜித், நான் உங்களுக்கு படம் தருகிறேன் என்று கூறி ஆரம்பம் படத்தினை கொடுத்தார். அதன்பின், என்னை அறிந்தால், வேதாளம் போன்ற படங்களை கொடுத்து அவரின் கடனை அடைக்க காரணமாக அமைந்தார். இதற்கு மேடையில் ஏ எம் ரத்னம் அஜித்தை பாராட்டியும் பேசினார்.