'இதெல்லாம் ரொம்ப தப்பு.. hurting'ஆ இருக்கும்.. நாங்களும் மனுஷங்க தான' பயில்வானை பற்றி பேசிய ஆலியா மானசா !

Alya manasa speaks about bayilvan ranganathan video getting viral

விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோ, சீரியல், மேடை நிகழ்ச்சிகள் என அதில் ஒளிபரப்பாகும் அனைத்தும் நல்ல வரவேற்பை பெறுவது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில், இப்படி இந்த சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவரும் பிரபலம் ஆகி விடுவார்கள் என சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு பரவலாக உள்ளது.

Alya manasa speaks about bayilvan ranganathan video getting viral

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என ஒளிபரப்பான தொடர் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் நம் ஆலியா மானசா. இந்த தொடரில் நடிக்கும் சமயத்தி, டப்ஸ்மேஷ் செய்து வீடியோ போடுவது, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது என செம பேமஸ் ஆக ரசிகர்களை கவர்ந்தார்.

Alya manasa speaks about bayilvan ranganathan video getting viral

அப்படி, ராஜா ராணி சீசன் 1ல் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடியாக நடித்திருந்தனர். இதன் மூலம் பிரபலம் அடைந்த இவர்கள, ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

Alya manasa speaks about bayilvan ranganathan video getting viral

இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், ஆலியா மானசாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

Alya manasa speaks about bayilvan ranganathan video getting viral

ராஜா ராணி சீசன் 1 தொடர்ந்து, ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள் குறித்த கதை ஆகும். சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா, 2வது பிரசவத்திற்காக சீரியல் இருந்து விடுபெற்றார்.

மேலும், இனி அந்த சீரியலில் என்றும் அறிவித்தார். ஆனால், இன்னும் சில மாதங்களுக்கு பின், வேறு சீரியலுக்கு திரும்புவதாக தெரிவித்திருந்தார்.

Alya manasa speaks about bayilvan ranganathan video getting viral

தனக்கென தனி யூடியூப் சேனல் வைத்து வரும் ஆலியா, அதில் வீடியோக்களை பதிவிடுவது, தனது குழந்தைகள் குறித்து பதிவிடுவது என இருந்து வருகிறார். மேலும், சில நிகழ்ச்சிகள், திறப்பு விழாக்களிலும் கலந்து கொள்கிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலியா, பயில்வான் ரங்கநாதன் குறித்து பேசிய வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

Alya manasa speaks about bayilvan ranganathan video getting viral

தமிழ் சினிமாவில் சிறு சிறு முக்கிய கதாபாத்திரங்களிலும், பிரபல காமெடி நடிகராகவும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தனி யூடியூப் சேனலை தொடங்கி சினிமா வட்டாரத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து பேசி ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

Alya manasa speaks about bayilvan ranganathan video getting viral

சினிமா துறையில் நடக்கும் விஷயங்களோடு விட்டு வைக்காமல், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பகிர்ந்து வருகிறார். நடிகர்-நடிகைகள் பலரும் இவரின் பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி புகார் கூறி வருகின்றனர்.

Alya manasa speaks about bayilvan ranganathan video getting viral

நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி மிகவும் கொச்சையாக பேசி வருவதை ரசிகர்கள் பலரும் கமெண்ட் பகுதியில் வசைபாடி வருகின்றனர்.

ஆலியாவிடம் பயில்வான் ரங்கநாதன் சினிமா துறையில் உள்ளவர்களை பற்றி பேசுவது குறித்து நீங்க என்ன நினைக்கறீங்க என கேட்க, அது ரொம்ப தப்பு.. எல்லா துறையிலயும் எல்லாமே நடக்குது நாங்களும் மனுஷங்க தான என அவர் கூறியுள்ளார்.

Share this post