RRR : அதிருப்தியில் ராஜமவுலியை Unfollow செய்த ஆலியாபட்.. தனது காட்சிகள் நீக்கப்பட்டதாக வருத்தம் !

Aliabhatt disappointed on rrr movie and unfollows rajamoulion social media

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் RRR. கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இத்திரைப்படம், தற்போது திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வருகிறது.

Aliabhatt disappointed on rrr movie and unfollows rajamoulion social media

இப்படத்தில் அலியா பட் நடித்த பல காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. எடுக்கப்பட்ட காட்சிகளும் எடிட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு படத்தில் காட்சிகளே அதிகமில்லை என விமர்சனங்களும் எழுந்தன. இதனால் அலியா பட் அதிருப்தி அடைந்தாராம்.

Aliabhatt disappointed on rrr movie and unfollows rajamoulion social media

தனக்கு நெருங்கியவர்களிடம் படத்தில் தனது காட்சிகளை நீக்கிவிட்டதாக புகார் கூறியிருக்கிறார். அத்துடன் இன்ஸ்டாகிராமில் ராஜமவுலியை பாலோவ் செய்வதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் ஆர்ஆர்ஆர் பட புரமோஷன் போட்டோக்களை நீக்கிவிட்டதாகவும் தெரிகிறது.

Share this post