என்னோட இந்த நிலைமைக்கு அவன்தா காரணம்.. சும்மா விட மாட்டேன்.. என வீடியோ பதிவிட்ட அக்ஷரா

Akshara reddy shares holi celbrating fun video with varun

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது OTT தளத்தில் BB அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

ராஜு,பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப், தாமரை, சிபி, சஞ்சீவ், வருண், அக்ஷரா, அபிநய்,அபிஷேக், இய்க்கி, இசைவாணி, மதுமிதா, சுருதி, சின்னபொண்ணு, நாடியா, நமீதா போட்டியாளர்களுடன் சீசன் 5 பிரமாண்டமாக துவங்கியது. இதில் விஜய் டிவி புகழ் ராஜு வெற்றி பெற்றார்.

Akshara reddy shares holi celbrating fun video with varun

பிரியங்கா 2வது இடத்தையும், பாவனி 3வது இடத்தையும், அமீர், நிரூப் ஆகியோர் 4 மற்றும் 5வது இடத்தை பிடித்தனர். இந்நிகழ்ச்சியில், அக்ஷரா, வருண் இருவரும் ஒரே நேரத்தில் எலிமினேட் ஆகினர். பின்னர் தற்போது நல்ல நண்பர்களாக உலா வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஹோலி குறித்து அக்ஷரா பதிவிட்டுள்ளார். அதில் அவரது முடி தாறுமாறாக கலர் ஆக காரணம் வருண் என கூறி அன்று நடைபெற்ற ஹோலி வீடியோவை பகிர்ந்துள்ளார். வருண் கையில் கலருடன் அக்ஷராவை நடுரோட்டில் துரத்தி, கார் மீதும் கலரை தூக்கி அடிக்கிறார். இதனால் இதற்கு பழி வாங்காமல் விட மாட்டேன் என ஜாலியாக வீடியோ போட்டுள்ளார்.

Share this post