புதிய ஷேர் ஸ்டைல்.. நீளமான தாடி.. கடுக்கன்.. என அஜித்தின் AK61 மாஸ் லுக்.. தீயாய் பரவும் போட்டோஸ் !

Ak61 ajith look photos getting viral on social media

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. அஜித் குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

பைக் ரேஸ், நகை கொள்ளை, போதை மருந்து பழக்கம் உள்ளிட்டவைகள் கொண்ட கதைக்களமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும், போனி கபூர், எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் AK61 உருவாகவுள்ளது.

Ak61 ajith look photos getting viral on social media

படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் சண்டைக்காட்சிகள் என தனியே ஏதும் இல்லது ஹீரோக்கும், வில்லனுக்குமான டெக்னிக்கல் சண்டையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

பல ஆண்டுகள் கழித்து அஜித் இத்திரைப்படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது. இப்படத்தில் சார்பேட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கேன் மற்றும் பலர் நடிப்பதாக சொல்லப்பட்டது.

மேலும், அஜித் ஜோடியாக தபு, ராகுல் ப்ரீத்தி சிங் நடிப்பதாக அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக கூறியுள்ளார்.

Ak61 ajith look photos getting viral on social media

இப்படத்திற்காக அஜித் புதிய லுக்கிற்காக, தனது உடல் எடையில் 25 கிலோ குறையவுள்ளார் எனவும் ஸ்டைலான அஜித்தை இதில் பார்க்கப்போகிறோம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அஜித் புதிய ஷேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார், அந்த புகைப்படம் தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது.

Ak61 ajith look photos getting viral on social media

Ak61 ajith look photos getting viral on social media

Share this post