பஞ்சதந்திரம் 2வில் அஜித் ? பிரபல நடிகரின் பேட்டி.. இணையத்தில் வைரல் !

பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யுகி சேது, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி, சங்கவி, தேவயானி, நாகேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம். இப்படத்திற்கு கிரேசி மோகன் டயலாக் எழுதியிருந்தார்.
2002ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வரை, இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள், சீன்கள் என எல்லாமே ரசிகர்களின் பேவரைட் ஆக இருந்து வருகிறது.
நண்பர்கள் கூட்டணி திருமணத்திற்கு பிறகு அடிக்கும் லூட்டி பற்றி செமையாக கதை வடிவமைச்சிருப்பார்.
முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் இன்றளவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக பஞ்ச தந்திரம் காம்போ மீண்டும் இணைந்து நடித்திருந்தது. அந்த புரோமோ மக்களிடையே வரவேற்பை பெற்றதோடு, பஞ்ச தந்திரம் படத்தின் 2ம் பாகத்தை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் பஞ்சதந்திரம் 2ம் பாகத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். சமீபகாலமாக, அவர் சீரியஸான படங்களிலேயே நடித்து வருவதால், பஞ்சதந்திரம் போன்ற காமெடி படத்தில் நடித்தால் அது அவரை வேறொரு கோணத்தில் காட்டும் என ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.