'ஜீன்ஸ்' படத்திற்காக அஜித்துடன் மூன்று நாட்கள் நடந்த படப்பிடிப்பு ! மிஸ் பண்ணிட்டிங்களே.. !

Ajith to act in jeans movie and 3 days shooting happened

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில், ஐஸ்வர்யா ராய், ராஜு சுந்தரம், நாசர், செந்தில், ராதிகா சரத்குமார், லக்ஷ்மி, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் ஜீன்ஸ். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

Ajith to act in jeans movie and 3 days shooting happened

1998ம் ஆண்டு அவ்வளவு டெக்னாலாஜி பெரிதும் இல்லாத காலத்திலேயே, டபுள் ஆக்ஷன், உலக அதிசயங்கள் முன் பாடல்கள் என அசத்தியிருந்தார் ஷங்கர். இன்றும் பலரும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக உள்ளது. இப்படம் குறித்த தகவல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Ajith to act in jeans movie and 3 days shooting happened

அதன்படி, இப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்கவிருந்தது அஜித் தானாம். அதற்காக மூன்று நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால், அஜித் படத்திலிருந்து திடீரென விலகினார்.

Ajith to act in jeans movie and 3 days shooting happened

என்ன காரணம் என்று தெரியவில்லை. மேலும், இந்த படத்திற்கான விளம்பரங்களை பிரம்மாண்டமாக செய்யும் சங்கரின் ஜீன்ஸ் படத்திற்கான பிரமோஷன்களில் கூட அஜித் பங்கு பெறவில்லை என காரணம் என்று கூறப்படுகிறது.

Ajith to act in jeans movie and 3 days shooting happened

அதைத்தொடர்ந்து, இயக்குனர் ஷங்கர் எந்த படத்திற்கும் அஜித்தை நடிக்க அணுகவே இல்லை. ஆனால், சில வருடங்கள் கழித்து முதன் முறையாக பேஸ்புக் பக்கத்தில் இணைந்த ஷங்கர், முதலில் அஜித் மற்றும் அவரின் ஆரம்பம் திரைப்படம் குறித்து தான் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith to act in jeans movie and 3 days shooting happened

இவர்கள் இருவரின் கூட்டணியில் படம் வரவேண்டும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Share this post