இந்த சீன்'ல டூப் போட்டு நடித்தாரா அஜித்? இதோ ஆதாரம்.. வைரலாகும் வீடியோ
தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் 3வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. ஏற்கனவே இவர்கள் மூவர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய இரண்டு படங்கள் நல்ல விமர்சனம் மற்றும் வசூல் பெற்ற நிலையில், துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படமும், அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியாக உள்ளதால், இந்த இரு படங்களின் புரோமோஷன் பணிகளும் படுவேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ‘துணிவு’ படத்தின், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் லுக் மற்றும் அவர்களின் கதாபாத்திரத்தின் பெயர் ஆகியவை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ‘துணிவு’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நெட்டிசன்கள் சிலர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் பட சாயலில் இருப்பதாக மீம்ஸ் போட்டு தெறிக்க விட்டனர்.
இயக்குனரும் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் ஹாலிவுட் படமான Inside Man-ன் காப்பி என்பது போல மறைமுகமாக தாக்கி பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 145 நிமிடம் 48 நொடிகள் போன்ற விவரங்கள் தற்போது வெளியானது.
அஜித்குமார் எப்போதும் தான் நடிக்கும் படங்களில் பைக் ஸ்டண்ட் மற்றும் சில சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார். அது போல டூப் வலிமை படத்தில் பல பைக் ஸ்டண்ட் காட்சிகளில் அஜித் ரிஸ்க் எடுத்து நடித்தார். ஆனால், அஜித் படங்கள் என்றாலே அதில் பைக் காட்சி இருக்கும் என்ற விஷயம் போக போக கேலிக்கு உள்ளானது. இதனால் துணிவு படத்தில் பைக் காட்சிகள் பெரிதும் இடம்பெறவில்லை.
மாறாக கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. துணிவு பட ட்ரைலரில் கூட அஜித் ஒரு ஜெட்ஸ்கியை ஓட்டி செல்வது போல ஒரு காட்சி இடம்பெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் அந்த காட்சியில் வருவது அஜித்தே இல்லை என்றும் இந்த படத்தில் பல ஸ்டண்ட் காட்சியில் அஜித்துக்கு பதில் நடித்தது வேறு ஒரு நபர் என்றும் நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வந்துகொண்டு இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள விஷ்வானத் என்பவர் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில் ‘அஜித் டூப்போட்டு நடித்தார் என்று சொல்வது ரொம்ப தப்புங்க, நான் அந்த காட்சி எடுத்த போது அங்கு தான் இருந்தேன் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த ஸ்பீட் போட்டில் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் படப்பிடிப்பு செய்தார்கள். அஜித் சார் தான் அதை ஓட்டினார். வெறும் ஒரு நிமிட காட்சிக்கு 10, 15 மணி நேரம் எடுத்தார்கள் அந்த காட்சிக்காக அவர் எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன் எனவே இது மாதிரி கேடு செய்யும் போது எப்படி மக்கள் இப்படி பேசலாம் என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.
#Thunivu Actor About Dope Scene In #Thunivu pic.twitter.com/L1gBpP4fQn
— chettyrajubhai (@chettyrajubhai) January 4, 2023