Rare Video: எல்லா பேட்டியிலும் சர்ச்சை.. கலைஞரின் விழாவில் அரசியல் பேசி பிரச்சனையை இழுத்த அஜித்

ajith speaking on politics in kalaignar function got many issues for him rare video viral

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

ajith speaking on politics in kalaignar function got many issues for him rare video viral

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள். அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை.

ajith speaking on politics in kalaignar function got many issues for him rare video viral

தற்போது, வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் ‘துணிவு’ படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ajith speaking on politics in kalaignar function got many issues for him rare video viral

இப்படம், 1985ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கதையாம். மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆர்ப்பரித்து வருகின்றனர். இன்று இப்படத்தில் இருந்து, ஜிப்ரன் இசையில், சில்லா சில்லா பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ajith speaking on politics in kalaignar function got many issues for him rare video viral

அஜித்துக்கு ஆரம்ப காலக்கட்டத்தில் விஜயை தன்னுடைய லெவலே இல்லை என்று நிறைய பேட்டிகளை கொடுத்து இருக்கிறார். படம் வெற்றி பெற்றால் மட்டும் இயக்குனர் காரணமாக சொல்கிறார்கள். ஃப்ளாப்பானால் ஏன் என்னை சொல்கிறீர்கள். அதுக்கும் அவர் தான் காரணம் என அஜித் பேசியதெல்லாம் அவருக்கு திமிர் அதிகம் என கோலிவுட்டே பேசியது.

ajith speaking on politics in kalaignar function got many issues for him rare video viral

படப்பிடிப்புகளில் இருக்கும் போதே ரேஸுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பார். ஒருமுறை வில்லன் படப்பிடிப்பு சமயத்தில் இப்படி அவர் செய்ய பிரபல தயாரிப்பாளரான கே.ஆர், நடிகர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் எனப் பேட்டி கொடுத்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக கண்ட நாயெல்லாம் என்னை பத்தி பேசக்கூடாது என அஜித் பதிலளித்தார். இது மிகப்பெரிய பிரச்சனை ஆனது. தொடர்ந்து அவர் ஒவ்வொரு பேட்டிகளிலும் தான் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் எனக் கூறிவிடுவார்.

ajith speaking on politics in kalaignar function got many issues for him rare video viral

ஆஞ்சநேயா படத்தின் ப்ரஸ்மீட் சமயத்தில் கூட இந்த படத்துக்கு பின்னர் நான் தான் அடுத்த சூப்பர்ஸ்டாராக இருப்பேன் எனக் கூறினார். இப்படி ஒவ்வொரு பேட்டியிலும் சர்ச்சையை கிளப்பி வந்த அஜித், மிகப்பெரிய பிரச்சனையை இழுத்தது ஒரு நிகழ்வில் தான். கருணாநிதிக்காக சினிமா பிரபலங்கள் சார்பில் நடத்தப்பட்ட பாச தலைவனுக்கு பாராட்டு விழாவில் அஜித் கலந்து கொண்டு பேசியபோது, “எங்களுக்கும் ப்ரைவசி இருக்கு. இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என மிரட்டுகின்றனர்” எனப் பேசினார்.

ajith speaking on politics in kalaignar function got many issues for him rare video viral

இதை கேட்ட ரஜினிகாந்த் எழுந்து கை தட்ட பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அதனால் அடுத்த நாளே மன்னிப்பு கேட்க வேண்டும் என அஜித்தை கட்சியில் இருந்து வலியுறுத்தி இருக்கிறார்கள். அதை தொடர்ந்து, ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார் கருணாநிதியை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதை தொடர்ந்து, தான் பேசினாலே பிரச்சனை வருகிறது. இனி பேசவே மாட்டேன் என முடிவு செய்தாராம் அஜித். இதனால், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை அறவே தவிர்த்ததாக கூறப்படுகிறது.

Share this post