22வது திருமண நாள்.. ட்ரெண்டாகும் அஜித் - ஷாலினி போட்டோஸ்.. ப்பா சுத்தி போடுங்கய்யா.. கண்ணுப்பட்டுட போகுது !

Ajith shalini couple and family photos trending on behalf of their 22nd anniversary

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள். அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை.

Ajith shalini couple and family photos trending on behalf of their 22nd anniversary

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை. பைக் ரேஸ், நகை திருட்டு, போதை பழக்கம் போன்றவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கலப்படமான விமர்சனங்களை பெற்றது.

Ajith shalini couple and family photos trending on behalf of their 22nd anniversary

இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் பிரபல நடிகை ஷாலினி. ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 50திற்கும் மேற்பட்ட படங்களில் வெற்றிகரமாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Ajith shalini couple and family photos trending on behalf of their 22nd anniversary

7 வருட இடைவேளைக்கு பிறகு கதாநாயகியாக என்ட்ரி கொடுத்த ஷாலினி, மலையாளம் மற்றும் தமிழில் 12 படங்களில் மட்டுமே நாயகியாக தோன்றினார். விஜய் அஜித், மாதவன் என முன்னணி நாயகர்களுடன் ஷாலினி நடித்த திரைப்படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வெற்றி படங்களாக அமைந்தது.

Ajith shalini couple and family photos trending on behalf of their 22nd anniversary

1999ல் அமர்க்களம் படப்பிடிப்பில் காதலில் விழுந்த அஜித்-ஷாலினி, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு, அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட இரு படங்களில் நடித்தார்.

Ajith shalini couple and family photos trending on behalf of their 22nd anniversary

அஜித்குமார்-ஷாலினி தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிய நிலையில், இவர்கள் இன்று 22வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருவதுடன் முன்னாடி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

Ajith shalini couple and family photos trending on behalf of their 22nd anniversary

Ajith shalini couple and family photos trending on behalf of their 22nd anniversary

Ajith shalini couple and family photos trending on behalf of their 22nd anniversary

Share this post