நியூ லுக்கில் அஜித்.. 'AK62' பட கெட்டப்பா..? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
தமிழ் திரையுலகில் டாப் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் துணிவு. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை பொழிந்தது.
இதனைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் AK62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில், அஜித் நடிக்க இருக்கும் AK62 படத்தின் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இப்படத்தை இயக்குவதில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகினார்.
மேலும், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. AK62 படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் இருந்து தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அஜித் சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்த நிலையில், அவருடன் ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்த புகைப்படத்தில் அஜித் செம ஸ்மார்டாக உள்ளார். மீண்டும் சால்ட் & பெப்பர் கெட்டப்பில் கூலிங் கிளாஸ் உடன் அஜித் செம ஸ்டைலிஷ் ஆக இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள், இதே கெட்டப்பில் ’AK62’ படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.