ஸ்லிம்மான தோற்றத்தில் அஜித்.. ஷார்ட்ஸ்'ல் செம ஃபிட் போட்டோ.. டிரெண்டாகும் ரீசன்ட் க்ளிக் !

Ajith kumar recent slim fit photos getting viral on social media

தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தை நிலைநாட்டி தனக்கென கோடி கணக்கில் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வலிமை.

Ajith kumar recent slim fit photos getting viral on social media

இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பை தந்தனர். திரைக்கதை கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர் வந்த திரைப்படம் என்பதால், இப்படத்தை கொண்டாட்டமாக கொண்டாடினர்.

Ajith kumar recent slim fit photos getting viral on social media

இதன் பின்னர், தற்போது AK61 திரைப்படத்திலும் எச்.வினோத் - போனி கபூர் கூட்டணி இணையவுள்ளது. நேற்று, நடிகர் அஜித் இன்று 51வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ரசிகர் ஒருவருடன் அவர் எடுத்துக் கொண்ட ரீசன்ட் க்ளிக் புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Ajith kumar recent slim fit photos getting viral on social media

AK61 படத்திற்காக 25 கிலோ எடை வரை நடிகர் அஜித் குறைத்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், உடல் எடையை குறைத்துள்ளார் அஜித். நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Ajith kumar recent slim fit photos getting viral on social media

AK61 ஃபர்ஸ்ட் லுக் அல்லது பெயர், AK62 லுக், AK63 இயக்குனர் என எதாவது ஒரு அப்டேட் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடாமல் அஜித் ரசிகர்கள் ஏமாந்து புலம்பி வருகின்றனர்.

Ajith kumar recent slim fit photos getting viral on social media

ஆனால், கிடைத்த நடிகர் அஜித்தின் ரீசன்ட் க்ளிக்கை ஒன்று டிரெண்டாகி உள்ளனர் ரசிகர்கள். அந்த புகைப்படத்தில் ஷார்ட்ஸ் அணிந்து செம ஹேண்ட்ஸம் ஆக போஸ் கொடுத்துள்ளார் நடிகர் அஜித்.

Share this post