கார் & பைக் மீது கொண்ட தீரா காதல்.. வைரலாகும் அஜித்குமாரின் வீடியோ !

Ajith kumar love for bikes and cars never ends said in interview

அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

Ajith kumar love for bikes and cars never ends said in interview

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். என்னதான் திரையில் வெற்றி நாயகனாக தோன்றினாலும், இவர் உண்மையில் ஒரு ரேஸர் என்பது நாம் அனைவரும் அறிவர்.

Ajith kumar love for bikes and cars never ends said in interview

பைக் மற்றும் கார் ஸ்டண்டில் மிகவும் ஆர்வம் கொண்ட அஜித், தனது படங்களில் தானே இதுபோன்ற காட்சிகளில் ஈடுபடுவார் என்பது பலரும் அறிந்த விஷயமே. சமீபத்தில் வெளியான வலிமை படத்தில் கூட அவர் செய்த பைக் ஸ்டண்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

Ajith kumar love for bikes and cars never ends said in interview

இந்நிலையில் 2010ம் ஆண்டு அஜித் கொடுத்த இன்டர்வியூ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் கலக்கி வருகிறது. அந்த பேட்டியில் அஜித் தன்னை ஒரு மோட்டார் ஸ்போர்ட் பிரியர் மற்றும் பந்தய வீரராக அடையாளப்படுத்த விரும்புவதாக கூறியுள்ளார்.

Share this post