இணையத்தில் ட்ரெண்டான அஜித் லேட்டஸ்ட் பிக்.. பிரபலங்களே ஏமாந்துட்டாங்க.. வெச்சி செய்யும் நெட்டிசன்கள்!!
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தனது கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
தற்போது, வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். 1985ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கதையாம். மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படத்தில் இருந்து, ஜிப்ரன் இசையில், சில்லா சில்லா, Gangstaa உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. அஜித் எந்த ஒரு சமூக வலைதள பக்கத்திலும் இல்லை என்றாலும், சமீப காலமாக, அஜித்தின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதே போல துணிவு படத்தின் புகைப்படங்களும் அடிக்கடி வெளியானது. அந்த வகையில், அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது. அந்த புகைப்படத்தில் வெள்ளை சட்டை அணிந்து கூலிங் கிளாஸ் உடன் அஜித் கிளாஸ் ஆக போஸ் கொடுத்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு பிரபலங்களும் பகிர்ந்து அஜித்தின் அழகை வர்ணித்து வந்தனர்.
அந்த வகையில், விஷ்ணுவர்தன் சகோதரரும் கழுகு பட நடிகருமான கிருஷ்ணாவும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் ட்விட்டர்வாசி ஒருவர், இது போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என்று கூறியிருந்தார். ஆனால், அதற்கு தலைக்கு என்றும் போட்டோஷாப் தேவை கிடையாது என்று கிருஷ்ணா கூறியிருந்தார்.
ஆனால், உண்மையில் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று இந்த புகைப்படத்தில் உண்மையாக இருக்கும் நபரின் புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து கிருஷ்ணாவின் இந்த பதிவை கலாய்த்து வருகின்றனர்.
Edit nu theriyama fire vidriya illa Nakkal adikiriyah bro !! 😂😂 pic.twitter.com/30jKCnAGti
— K-H (@daexshiv) December 24, 2022
Here is the source of the image. However, the editing has been expertly done. pic.twitter.com/aComRdfarQ
— Sathees Balasubramaniam (@Sathees_sanoj) December 24, 2022