முதல்வர் இருக்கையில் அஜித் ? ட்விட்டரை அதகளப்படுத்தும் போட்டோ.. கொண்டாடும் ரசிகர்கள் !

Ajith kumar in chief minister seat fan made photo getting viral on social media

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

Ajith kumar in chief minister seat fan made photo getting viral on social media

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.

Ajith kumar in chief minister seat fan made photo getting viral on social media

அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது.

Ajith kumar in chief minister seat fan made photo getting viral on social media

படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது.

Ajith kumar in chief minister seat fan made photo getting viral on social media

இப்படத்தில் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும் சார்பேட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

Ajith kumar in chief minister seat fan made photo getting viral on social media

இப்படத்தில் அஜித், கல்லூரிப் பேராசிரியராக நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. இந்நிலையில், அஜித் குமார் அவர்களின் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செம வைரலானது.

Ajith kumar in chief minister seat fan made photo getting viral on social media

வெளிநாட்டில் பைக் ரைட், பல கோடி மதிப்பிலான காருடன் போஸ், ரசிகர்களுடன் போட்டோஸ் என பல புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்து வைரல் ஆனது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் அஜித், தனது ரசிகர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதினார்.

Ajith kumar in chief minister seat fan made photo getting viral on social media

இலங்கையை சேர்ந்த லாவன் என்பவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகன். அவரது நண்பர் ஒருவர் லண்டனில் வசித்து வருகிறார். தற்போது அங்கு சுற்றுலா சென்றுள்ள அஜித்தை நேரில் சந்தித்த லாவனின் நண்பன், அவருக்காக அஜித்திடம் பேசி கைப்பட எழுதி வாங்கிய கடிதத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆனது.

Ajith kumar in chief minister seat fan made photo getting viral on social media

இந்நிலையில், அஜித் கடிதம் எழுதும்போது எடுத்த புகைப்படத்தை போட்டோஷாப்பில் எடிட் செய்த அஜித் ரசிகர்கள், அவர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் இருக்கையில் அமர்ந்து எழுதும்படி மாற்றியமைத்து உள்ளனர். கிட்டத்தட்ட ஒரிஜினல் போலவே இருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Share this post