'அரசியல் டயலாக்கா.. அது நமக்கு செட் ஆகாதுப்பா !' என சொன்ன அஜித்.. மாற்றியமைக்கும் பணியில் விக்னேஷ் சிவன் !

Ajith kumar asks to remove politics dialogue from ak62 vignesh shivan changes dialogue

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலம் ஆனவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா போன்ற 3 முக்கிய நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து முக்கோண காதல் கதை வடிவில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Ajith kumar asks to remove politics dialogue from ak62 vignesh shivan changes dialogue

இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இதன் பிறகு, அஜித் நடிக்கும் AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.

போனி கபூர் - எச்.வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மீண்டும் இதே கூட்டணி AK61 படத்தில் இணைந்துள்ளது.

Ajith kumar asks to remove politics dialogue from ak62 vignesh shivan changes dialogue

இப்படத்திற்கான ஷூட்டிங்காக ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து அதற்கான ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வில்லனாக சார்பெட்டா பரம்பரை வில்லன் ஜான் கொகேன் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Ajith kumar asks to remove politics dialogue from ak62 vignesh shivan changes dialogue

இதனைத்தொடர்ந்து, நடிகர் அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 படத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், AK62 படத்தின் கதை குறித்த முக்கிய தகவல் வெளியானது.

Ajith kumar asks to remove politics dialogue from ak62 vignesh shivan changes dialogue

அதன்படி தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் நடத்துபவராக நடிகர் அஜித் நடிக்க உள்ளதாகவும், சாதாரண மனிதராக இருந்து கடின உழைப்பால் முன்னேறும் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் காட்சியளிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

Ajith kumar asks to remove politics dialogue from ak62 vignesh shivan changes dialogue

தற்போது, AK62 படத்தில் அரசியல் வசனங்கள் சிலவற்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் வைத்திருந்ததாகவும், இதற்கு அஜித், இதெல்லாம் நமக்கு செட் ஆகாதுப்பா எனக்கூறி அந்த வசனங்களை நீக்கிவிடுமாறு கூறிவிட்டாராம்.

இதனால் அதனை மாற்றியமைக்கும் பணிகளில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share this post