KGF 2 success Partyயில் அஜித்தின் வசனம் எழுதப்பட்ட கேக்.. KGF 3ம் பாகத்திற்கான அறிவிப்பாக மாறிய புகைப்படங்கள் !

Ajith famous dialogue written on kgf 2 success party cake indicates kgf chapter 3

2018ம் ஆண்டு கேங்ஸ்டர் படமாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் KGF. இப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெற்றி பெற்றதால் இப்படத்தின் 2ம் பாகத்தை பெரும் பிரம்மாண்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுவிட்டது.

Ajith famous dialogue written on kgf 2 success party cake indicates kgf chapter 3

பான் இந்தியா படமாக தயாரான இப்படத்தின் 2ம் பாகம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலகமெங்கும் 10 ஆயிரம் திரைகளில் வெளியிடப்பட்டன. வெளியான 12 நாட்களில் 900 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. கே.ஜி.எஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் 3ம் பாகமும் உருவாக உள்ளதாக சூசகமாக அறிவித்துள்ளனர்.

Ajith famous dialogue written on kgf 2 success party cake indicates kgf chapter 3

இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது.

Ajith famous dialogue written on kgf 2 success party cake indicates kgf chapter 3

கோவாவில் நடைபெற்ற கே.ஜி.எஃப் 2 படத்தின் சக்சஸ் பார்ட்டியில் நடிகர் யாஷ், இயக்குனர் பிரசாந்த் நீல் உள்பட படக்குழுவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Ajith famous dialogue written on kgf 2 success party cake indicates kgf chapter 3

சக்சஸ் பார்ட்டியில் வெட்டப்பட்ட கேக்கில் ஆரம்பம் படத்தில் அஜித் பேசும் “It’s Just the Beginning.. “ என்ற பஞ்ச் வசனமும் இடம்பெற்றிருந்தது. இதன்மூலம் கே.ஜி.எஃப் படத்தின் 3ம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை படக்குழு சூசகமாக சொல்லி உள்ளதாக பார்ட்டியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith famous dialogue written on kgf 2 success party cake indicates kgf chapter 3

Share this post