ஷாலினியை கேள்வி கேட்டு திணறடித்த நிரூபர்.. டென்ஷனாகி கோபப்பட்டு பேசிய அஜித் !

Ajith angry on press meet while shalini cornered with questions

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள். அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை.

Ajith angry on press meet while shalini cornered with questions

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை. பைக் ரேஸ், நகை திருட்டு, போதை பழக்கம் போன்றவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கலப்படமான விமர்சனங்களை பெற்றது.

Ajith angry on press meet while shalini cornered with questions

இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் பிரபல நடிகை ஷாலினி. ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 50திற்கும் மேற்பட்ட படங்களில் வெற்றிகரமாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Ajith angry on press meet while shalini cornered with questions

7 வருட இடைவேளைக்கு பிறகு கதாநாயகியாக என்ட்ரி கொடுத்த ஷாலினி, மலையாளம் மற்றும் தமிழில் 12 படங்களில் மட்டுமே நாயகியாக தோன்றினார். விஜய் அஜித், மாதவன் என முன்னணி நாயகர்களுடன் ஷாலினி நடித்த திரைப்படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வெற்றி படங்களாக அமைந்தது.

Ajith angry on press meet while shalini cornered with questions

1999ல் அமர்க்களம் படப்பிடிப்பில் காதலில் விழுந்த அஜித்-ஷாலினி, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு, அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட இரு படங்களில் நடித்தார். அஜித்குமார் - ஷாலினி தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

Ajith angry on press meet while shalini cornered with questions

இந்த மாதிரியான ஒரு கணவர் இருக்க மாட்டார் என திரையுலகம் வியந்து கூறும் அளவிற்கு ஒருவர் என சொல்லப்படுபவர். மேலும், அந்தனன் ஒரு பேட்டியில் அஜித் - ஷாலினி பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில் அஜித் ஷாலினி திருமணம் பற்றிய ஒரு பிரஸ் மீட்டில் அஜித் ஷாலினி மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Ajith angry on press meet while shalini cornered with questions

அந்த மீட்டில் ஒரு நிருபர் ஷாலினியிடம் மட்டும் ஏகப்பட்ட கேள்விகளை பதில் சொல்ல விடாமல் திணறடித்துள்ளார். அது என்ன? இது என்ன? என தொடர்ந்து கேள்விகளை கேட்க அஜித் உடனே டென்ஷனாகி இப்ப, உங்களுக்கு என்ன பிரச்சினை? என்னதான் வேணும் என கோபத்துடன் அந்த நிருபரை பேசியுள்ளார். அதன்பின்னர் அஜித்திடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

இதனை கூறி, ஷாலினிக்கு ஒன்னுனா அஜித் சும்மா இருக்கமாட்டார் என பத்திரிக்கை நிருபர் அந்தனன் கூறினார்.

Share this post