அஜித்துடன் இணையும் சூர்யா.. சுதா கொங்கரா இயக்கத்தில் புது கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்.. படமாகும் உண்மை சம்பவம் !

Ajith and surya to act together in sudha kongara next film

இறுதி சுற்று வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இப்படம் வெளியாகி செம் ஹிட் அடித்தது. இப்படத்தில் சூர்யாவின் எதார்த்தமான கதாபாத்திரம், அபர்ணா நடித்த பொம்மி கதாபாத்திரம், மேலும் நண்பர்கள் கதாபாத்திரம் என அனைத்தும் பெரிதும் பேசப்பட்டது.

Ajith and surya to act together in sudha kongara next film

சூரரைப் போற்று வெற்றிக்கு பின் ஹிந்தி ரீமேக் இயக்குவதற்கு ஒப்பந்தமானார் சுதா கொங்கரா. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. சூர்யா - ஜோதிகாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடிக்கிறார்.

Ajith and surya to act together in sudha kongara next film

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தை கே.ஜி.எஃப் 1’, ‘கே.ஜி.எஃப் 2’, பிரபாஸின் ‘சலார்’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ஹோம்பல் பிலிம்ஸ் தயாரிப்பில் அவர் படம் இயக்குவதாக தகவல் வெளியானது.

Ajith and surya to act together in sudha kongara next film

அதில், தமிழ் முன்னணி பிரபலங்களான, அஜித் மற்றும் சூர்யா இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது.

Ajith and surya to act together in sudha kongara next film

சூர்யா தற்போது இயக்குனர் பாலா உடன் சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார். மேலும், வலிமை படத்தை தொடர்ந்து, மீண்டும் வினோத் இயக்கத்தில், உருவாகும் AK61 படத்தில் அஜித் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post