தலைவர்170 அப்டேட்: முதன்முறையாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி.. வெளியான மாஸ் போஸ்டர்!

aiswarya rajinikanth to direct thalaivar170 poster of laal salaam getting viral

தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.

aiswarya rajinikanth to direct thalaivar170 poster of laal salaam getting viral

80ஸ்கள் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றதோடு தலைவர் என ரசிகர்கள் அழைக்கும்படி தனது நற்பண்புகளையும் கொண்டுள்ளவர். பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

aiswarya rajinikanth to direct thalaivar170 poster of laal salaam getting viral

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. தற்போது, இவர் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

aiswarya rajinikanth to direct thalaivar170 poster of laal salaam getting viral

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்க உள்ள அடுத்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்கிற அறிவிப்பு வெளியானது. அதில் ஒரு படத்தை சிபி சக்ரவர்த்தியும் மற்றொரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் இயக்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது.

aiswarya rajinikanth to direct thalaivar170 poster of laal salaam getting viral

இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக அப்படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு லால் சலாம் என பெயரிடப்பட்டு உள்ளதாகவும், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் ஐஸ்வர்யா இயக்கத்தில் முதன்முறையாக ரஜினி நடிக்க உள்ளது உறுதியாகி இருக்கிறது.

aiswarya rajinikanth to direct thalaivar170 poster of laal salaam getting viral

மேலும் இப்படம் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட கதைக்களத்தை கொண்டதாம். அதனால் இப்படத்தில் கிரிக்கெட் நன்கு ஆடத்தெரிந்த நடிகர்களான விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும், இப்படத்தை 2023ம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டு உள்ளனர்.

aiswarya rajinikanth to direct thalaivar170 poster of laal salaam getting viral

Share this post