கிரிக்கெட் ரசிகர்கள் பேவரைட் பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் பயோபிக் !

Aiswarya rajinikanth to direct sourav ganguly biopic

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இவர் பிரபல நடிகர் தனுஷ் அவர்களது மனைவியும் ஆவார்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார்.

Aiswarya rajinikanth to direct sourav ganguly biopic

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.

Aiswarya rajinikanth to direct sourav ganguly biopic

இவர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, வை ராஜா வை என்னும் படத்தையும் இயக்கினார். இதுமட்டுமின்றி, விசில் படத்தில் நட்பே நட்பே பாடல் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன்மேல ஆசதான் பாடல் என இரண்டையும் பாடியுள்ளார்.

Aiswarya rajinikanth to direct sourav ganguly biopic

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமாசென் அவர்களுக்கு டப்பிங் பேசியதும் இவர்தான் இவர்தான்.

இப்படி பல்வேறு திறமைகளை கொண்ட இவர், தற்போது தனது பிட்னஸ் மீது ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், ஐஸ்வர்யா, மியூசிக் வீடியோ இயக்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

Aiswarya rajinikanth to direct sourav ganguly biopic

தற்போது ‘ஓ சாதிசால்’ என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளை பார்ப்பதற்காக தனது 2 மகன்களுடன் கொல்கத்தா சென்றுள்ளார்.

Aiswarya rajinikanth to direct sourav ganguly biopic

அப்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் இரவு டின்னருக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுவதால் ,ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த படத்தை இயக்குகிறாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Aiswarya rajinikanth to direct sourav ganguly biopic

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிருத்திக் ரோஷன், ரன்பீர் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா உள்பட ஒருசில பிரபல நடிகர்கள், கங்குலி வேடத்தில் நடிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Aiswarya rajinikanth to direct sourav ganguly biopic

Share this post