'நான் திருடியதற்கு காரணமே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான்..' விசாரணையில் வெளியான ஷாக்கிங் தகவல்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இவர் பிரபல நடிகர் தனுஷ் அவர்களது மனைவியும் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.
தற்போது, சமீப காலமாக, கோவம் குறைந்து மீண்டும் தனுஷுடன் சேரும் முடிவில் ஐஸ்வர்யா இருப்பதாக கூறப்பட்டாலும், இருவர் தரப்பில் இருந்தும் இது வரை எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது.
அதன் பின்னர் இவர்களின் விவாகரத்து குறித்து இரு தரப்பினரும் எந்தவித கருத்தையும் வெளிகாட்டாமல் இருந்து வந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன், ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அப்போது சமரச பேச்சுவார்த்தையில் விவாகரத்து முடிவை தற்காலிகமாக கைவிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டது. ஆனால், அது குறித்த எந்த ஒரு அறிகுறியும் தற்போது வரை இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய வீட்டில் வேலை செய்பவர்கள் தான் காரணமாக இருப்பார்கள் என்றும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
விசாரணையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி என்பவர் தான் இதற்கு காரணம் என கைது செய்யப்பட்டார். திருட்டை செய்தது நான் தான் என ஈஸ்வரியும் ஒப்புக்கொண்டார். இதன்பின் ஈஸ்வரி வீட்டில் இருந்து 100 பவுன் நகைகளையும் 4 கிலோ வெள்ளியும், 30 கிராம் வைரமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஐஸ்வர்யா கூறியதை விட அதிகமான நகைகள் ஈஸ்வரி வீட்டில் இருந்ததால் சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து ஐஸ்வர்யா விடமும் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா வீடு மட்டுமின்றி ரஜினிகாந்த், தனுஷ் வீட்டில் கூட ஈஸ்வரி வேலை செய்து வந்துள்ளார் என தெரியவந்தது. இதனால் ரஜினி, தனுஷ் வீட்டிலிருந்தும் நகைகளை திருடி இருப்பாரா ஈஸ்வரி என்ற கண்ணோட்டத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா வீட்டில் திருடிய காரணம் குறித்து ஈஸ்வரி போலீஸிடம் கூறியுள்ளார்.
இதில் ‘நான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் மாடு போல் உழைத்தேன். அவர் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பேன். எனக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் மட்டுமே சம்பளம் தருவார். அந்த காசு ஒரு குடும்பத்திற்கு போதுமானதாக இருக்குமா? அதனால் தான் திருட துவங்கினேன். முதலில் சின்ன சின்னதாக திருட ஆரம்பித்தேன். கண்டுபிடிக்காததால், நகைகளையும் திருடினேன். இரு அடுக்கு மாடி வீட்டையும் வாங்கினேன்’ என ஈஸ்வரி கூறியுள்ளார்.