மதம் மாறினாரா ஐஸ்வர்யா ராஜேஷ் ? எதுக்காகன்னு அவரே வெளியிட்ட தகவல்..

aiswarya rajesh new look on converted religion photos getting viral

ஆரம்ப காலத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனைத் தொடர்ந்து, கலைஞர் தொலைக்காட்சியில் கலா மாஸ்டரின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 3வது இடத்தை பிடித்தார்.

aiswarya rajesh new look on converted religion photos getting viral

இதன் மூலம், இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. அவர்களும் இவர்களும், நீதானா அவன் போன்ற திரைப்படங்கள் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார். பின்னர், தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

aiswarya rajesh new look on converted religion photos getting viral

விளையாட வா, அட்டகத்தி, புத்தகம், திருடன் போலீஸ், காக்கா முட்டை, மனிதன் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். காக்கா முட்டை மற்றும் கனா திரைப்படங்கள் இவரது நடிப்பு பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இப்படங்களுக்காக பல விருதுகளையும் பெற்றார்.

aiswarya rajesh new look on converted religion photos getting viral

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது, டிரைவர் ஜமுனா, மோஹன்தாஸ், தீயவர் குலை நடுங்க, துருவ நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

aiswarya rajesh new look on converted religion photos getting viral

வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர், தனது திறமை மூலம் முன்னேறி வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமிய பெண் தோற்றத்திற்கு மாறி இருக்கும் போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

aiswarya rajesh new look on converted religion photos getting viral

என்ன என பார்த்தால்.. அந்த போட்டோ அடுத்து அவர் நடிக்க இருக்கும் பர்ஹானா என்ற படத்தின் கெட்டப் தானாம்.

Share this post