காக்கா முட்டை..கனா.. இப்போ டிரைவர் ஜமுனா.. பர்ஸ்ட் லுக்கில் மிரட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் !

Aiswarya rajesh first look of driver jamuna released

தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் சினி உலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர், கலைஞர் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ரியாலிட்டி ஷோ ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

Aiswarya rajesh first look of driver jamuna released

இதனைத் தொடர்ந்து, சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்த இவர், நீதானா அவன் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் பெரிய வரவேற்பு பெறாத நிலையில், விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் திரைப்படங்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

Aiswarya rajesh first look of driver jamuna released

கோலிவுட் வட்டாரத்தில் தனக்கென இடத்தை பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அவர்களும் இவர்களும், உயர்திரு 420, சட்டப்படி குற்றம், அட்டகத்தி, புத்தகம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். இவருக்கு பெரிய மைல்கல் ஆக அமைந்த திரைப்படங்கள்: கனா மற்றும் காக்க முட்டை.

Aiswarya rajesh first look of driver jamuna released

தனக்கான bold கதாபாத்திரங்கள் கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றார். இவர் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Aiswarya rajesh first look of driver jamuna released

தற்போது, தனது சமூகவலைதளப் பக்கத்தில் தான் நடிக்கும் புதிய படமான டிரைவர் ஜமுனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால்டாக்ஸி ஓட்டுனர் வேடத்தில் நடிக்கிறார். இயக்குனர் பி கின்ஸ்லின் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Aiswarya rajesh first look of driver jamuna released

Aiswarya rajesh first look of driver jamuna released

Share this post