நான் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா? ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன ‘நச்’ பதில்.. வைரல் வீடியோ!

aiswarya rajesh answers for question about next ladysuperstar question

ஆரம்ப காலத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனைத் தொடர்ந்து, கலைஞர் தொலைக்காட்சியில் கலா மாஸ்டரின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 3வது இடத்தை பிடித்தார்.

aiswarya rajesh answers for question about next ladysuperstar question

இதன் மூலம், இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. அவர்களும் இவர்களும், நீதானா அவன் போன்ற திரைப்படங்கள் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார். பின்னர், தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

aiswarya rajesh answers for question about next ladysuperstar question

விளையாட வா, அட்டகத்தி, புத்தகம், திருடன் போலீஸ், காக்கா முட்டை, மனிதன் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். காக்கா முட்டை மற்றும் கனா திரைப்படங்கள் இவரது நடிப்பு பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இப்படங்களுக்காக பல விருதுகளையும் பெற்றார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

aiswarya rajesh answers for question about next ladysuperstar question

வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர், தனது திறமை மூலம் முன்னேறி வருகிறார். இவர் நடிப்பில், ட்ரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிட்சன் போன்ற பல படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளது. இவர் நடித்துள்ள ட்ரைவர் ஜமுனா திரைப்படம் வரும் நவம்பர் 11ம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை வத்திக்குச்சி பட இயக்குனர் கின்ஸ்லி இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

aiswarya rajesh answers for question about next ladysuperstar question

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் படக்குழு பேட்டி அளித்தது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறி இருந்தது, க/பெ ரணசிங்கம் படத்தை முடித்துவிட்டு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்கலாம் என்று தான் திட்டமிட்டு இருந்தேன். அப்போது வத்திக்குச்சி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் டிரைவர் ஜமுனா படத்தின் கதையை என்னிடம் சொன்னார். பெண் டாக்ஸி ஓட்டுனரின் கதையை மையப்படுத்திய படம். கதை கேட்கும் போது எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.

aiswarya rajesh answers for question about next ladysuperstar question

நான் சமீபத்தில் நடித்த மூன்று படங்களுமே ஓடிடியில் வெளியாகி இருந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறது. சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஓடிடியில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. திரையரங்களில் அதற்கான வரவேற்பு தற்போது குறைந்து இருக்கிறது. இருந்தாலும், வித்தியாசமான தரமான திரைப்படங்களை ரசிகர்கள் ஆதரிப்பது குறையவில்லை. அது போன்ற ஒரு நல்ல திரைப்படம் தான் டிரைவர் ஜமுனா.

aiswarya rajesh answers for question about next ladysuperstar question

இந்த படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. நம்பிக்கையுடன் வந்து பார்க்கலாம். கார் ஓட்டுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் இந்த படத்தின் ஒரு காட்சியை தவிர மற்ற எல்லா ஸ்டாண்ட் காட்சிகளிலும் டூப் போடாமலே நானே நடித்திருக்கிறேன் என கூறினார். செய்தியாளர் ஒருவர், நயன்தாரா போல நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படத்தில் மட்டும் நடிக்கிறீர்கள் என கேட்கவே, நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டார் தான். நா எல்லாம் எங்க. எனக்கு ஹீரோ கூட நடிக்க கூடாதுனு எல்லாம் இல்ல. கதை அப்டி அமையுது. நயன்தாரா ஒரு பெரிய நடிகை. நான் இப்போதுதான் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வளர்ந்து இருக்கிறேன் என்று பெருந்தன்மையாக பேசியிருக்கிறார்.

Share this post