பொறுமைக்கும் அளவு இருக்கு.. அதிரடி மாற்றம் செய்த ஐஸ்வர்யா.. கவலையில் ரசிகர்கள் !
கடந்த 2004ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். திரைத்துறையில் தந்தை மற்றும் கணவர் உச்சத்தில் இருக்கும் சமயம், ஐஸ்வர்யா இயக்கநராக அவதாரம் எடுத்து வந்தார்.
2012ல் தனுஷை வைத்து 3 என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, வை ராஜா வை என்னும் படத்தையும் இயக்கினார்.
இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஐஸ்வர்யா தனது கவனத்தை திருப்ப, மியூசிக் வீடியோ இயக்குவதில் ஆர்வம் செலுத்தி வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது. தமிழில் இதற்கு பயணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடியுள்ளனர்.
எப்படியாவது இருவரையும் சேர்த்து வைத்து விடலாம் என இருவீட்டாரும் எண்ணிய சமயத்தில், தனுஷ், வாழ்த்துக்கள் தோழி என பதிவிட்டிருந்தது, ஐஸ்வர்யாவுடன் இணையும் எண்ணம் துளியும் இல்லை என்று தனுஷ் மறைமுக சுட்டிக்காட்டியதாக சொல்லப்படுகிறது.
இதனால், தனுஷுக்காக இனி காத்திருப்பது வீண் என்பதை உணர்ந்து, அவரும் தனுஷை விட்டு விலக முடிவு செய்தார்.
3 மாதங்களுக்கு முன்பே இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில், ஐஸ்வர்யா தனது ட்விட்டர் உள்பட சமூக வலைதளப்பக்கங்களில் தனுஷின் பெயரை நீக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து தனுஷ் பெயரை நீக்கி, தனது தந்தையின் பெயரை சேர்த்துக் கொண்டார்.