நீங்க டாக்டரா?.. சமந்தாவை அடுத்து நயன்தாராவை விளாசிய மருத்துவர்..!

after-samantha-nayantahra-controversy-viral

செம்பருத்தி டீ குடிப்பது உடம்புக்கு ரொம்ப நல்லது என இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார் நயன்தாரா. தான் செம்பருத்தி டீ குடித்து வருவதாக தெரிவித்து இருந்தார். மேலும், செம்பருத்தி டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டு இருந்தார்.

இந்த டீயை தனக்கு பரிந்துரை செய்த ஜீனியஸை டேக் செய்து ரெசிபி வேண்டுமானால் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று நயன்தாரா தெரிவித்திருந்தார். சூப்பர் தகவல் நாங்களும் குடித்து பார்த்து சொல்கிறோம் என்று கூறிய நிலையில், பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், நடிகை சமந்தாவை விட அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் சினிமா நடிகை நயன்தாரா தன்னை பின் தொடரும் 8.7 மில்லியன் பாலவர்ஸ்களுக்கு செம்பருத்தி குறித்து தவறான தகவல் கொடுத்து இருக்கிறார் என்று கூறி ஒரு பதிவை ஒன்றை எக்ஸ் தளத்தில் லிவர் டாக்டர் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், நயன்தாராவை விமர்சித்ததால் நயன்தாரா அந்த பதிவை டெலிட் செய்து விட்டார்.

after-samantha-nayantahra-controversy-viral

மேலும், செம்பருத்தி டீ குடிப்பதால் ஆண்களின் டிஸ்யூஸ் பாதிக்கப்படும். மேலும், பெண்கள் அந்த டீயை குடித்து வந்தால் பூ பெய்துவது தள்ளிப் போகும். குழந்தையின் எடையின் பிரச்சனை வரும். எனவே, Reproductive வயதில் இருக்கும் ஆண்களும் பெண்களும் செம்பருத்தி டியை குடிக்க கூடாது என்று அவர் அறிவுரை கூறியிருந்தார்.

முன்னதாக, சமந்தாவின் நெபுலைசர் குறித்து ட்விட் செய்த லிவர் டாக்டர் அந்த டுவிட் வைரலான நிலையில், தற்போது நயன்தாரா பற்றி டுவிட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this post