துணிவு படத்தில் 'சில்லா சில்லா' பாடலை தொடர்ந்து 'காசேதான் கடவுளடா' பாடல் இணையத்தில் லீக்.. என்ன நடக்குதுங்க?

after chilla chilla 2nd single from thunivu kaasethaan kadavulaada song got released from social media

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

after chilla chilla 2nd single from thunivu kaasethaan kadavulaada song got released from social media

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.

after chilla chilla 2nd single from thunivu kaasethaan kadavulaada song got released from social media

அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் ‘துணிவு’ படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது.

after chilla chilla 2nd single from thunivu kaasethaan kadavulaada song got released from social media

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அஜித் நடிக்கும் துணிவு படம் 1985ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த வங்கி கொள்ளை உண்மை சம்பவத்தை மையமாகக் கதையாம்.

after chilla chilla 2nd single from thunivu kaasethaan kadavulaada song got released from social media

இப்படத்தில், மஞ்சு வாரியார், மற்றும் சமுத்திரக்கனி, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

after chilla chilla 2nd single from thunivu kaasethaan kadavulaada song got released from social media

இப்படத்தில் இருந்து, ஜிப்ரன் இசையில், சில்லா சில்லா என்னும் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ஜிப்ரான் இசையில் அனிருத் குரலில் இப்பாடல் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பாடல் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பே, இணையத்தில் லீக் ஆகியது.

after chilla chilla 2nd single from thunivu kaasethaan kadavulaada song got released from social media

‘சில்லா சில்லா’ பாடல் 10 செகண்ட் கொண்ட காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்தது. எனினும் இந்த பாடல் கேட்பதற்கு செம்ம மாஸாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ‘சில்லா சில்லா’ பாடல் தற்போது திருட்டு தனமாக சில நொடிகள் வெளியாகி இருந்தாலும் இதனை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என கூறி வந்தனர். இந்நிலையில் காசேதான் கடவுளடா என்னும் 2வது சிங்கிள் பாடலும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களையும் பட குழுவினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Share this post