'மறுபடியும் Smoking Room போனா Evict பண்ணிடுவேன்' போட்டியாளரை எச்சரித்த பிக்பாஸ்.. வைரல் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகை ரட்சிதா, ராப் பாடகர் ஏ.டி.கே, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, மாடல் குயின்சி, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன் ராஜேஷ் எவிக்ட் ஆகி வெளியேறினர்.
தற்போது 75 நாட்களுக்கு மேல் ஆகி, இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில், இந்த வாரம் Ticket to Finale நடந்து வருகிறது. இந்த டிக்கெட்டை ஜெயித்து முதல் ஆளாக பைனலுக்கு செல்ல இருக்கும் போட்டியாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்குகள் தற்போது நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்திற்கு பக்கத்திலேயே ஸ்மோக்கிங் அறை வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு கேமரா கிடையாது. அசீம் முதல் மணிகண்டன் வரை பலரும் இந்த ஸ்மோக்கிங் ரூமை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், பிக்பாஸ் வீட்டில் அதிகமாக ஸ்மோக்கிங் ரூமை பயன்படுத்தும் போட்டியாளர்களில் ஒருவர் ஏடிகே. இவர் கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது மயங்கி விழுந்ததினால் சிகிச்சை எடுத்த பின் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.
மேலும் மருத்துவர்கள் இப்படி இனி ஆகாமல் இருக்க புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று கண்டிப்பாக கூறியிருந்தனர். ஆனால் ஏடிகே அளவுக்கு மீறி புகைப்பிடித்தால் பிக் பாஸ் ஏடிகேவை அழைத்து திட்டி இருக்கிறார். பிக்பாஸ் கூறியது `உங்களை மருத்துவர்கள் கண்டிப்பாக புகை பிடிக்க கூடாது எனக் கூறியிருந்தனர். உங்களுடைய மன அழுத்தம் எனக்கு புரிகிறது, இருந்தாலும் இப்போதே நீங்கள் சோர்வாக இருக்கிறீர்கள்.
இப்படியே இருந்தால் உங்களை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் அனுப்புவதை விட வேறு வழியில்லை’ என்று கூறியிருந்தார். இதற்கு ஏடிகேவும் `சரி பிக் பாஸ் நா இனி ஸ்மோக் பண்ணல என்னோட உடலை பார்த்துக் கொள்கிறேன் எனக் கூற, அறிவுரை கூறி ஏடிகேவை வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் பிக்பாஸ். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
— Anbe Sivam (@AnbeSivam_7) January 4, 2023