விஜய் டிவி பிரபலத்தை ஏமாற்றிய அதிதி சங்கர்.. அதிர்ச்சியில் பிரபலம் !
குட்டி புலி படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விருமன். இப்படத்தை, சூர்யா - ஜோதிகாவின் சொந்த நிறுவனமான 2D Entertainment தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் முடிவுபெற்று படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், விருமன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இத்திரைப்படம் கிராமத்து கதையை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது. விருமன் படத்தில் இடம்பெற்றிக்கும் ஒரு பாடலை விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி பாடியுள்ளார்.
எனவே, இந்த படத்தின் ரிலீஸ்க்காக மிகவும் ஆர்வமாக காத்து வந்தனர். இப்படிப்பட்ட நிலையில், தற்போது, இந்த படத்தில் அவர் பாடிய பாடலை அப்படியே நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக அதிதி சங்கர் பாட வைத்துள்ளனர். தற்போது, அதிதி சங்கர் பாடிய பாடலை திரையில் வெளியிடவுள்ளனர்.
ராஜலக்ஷ்மி மிகவும் ஆர்வமாக காத்து வந்த நிலையில், தற்போது இவருக்கு பெரும் ஏமாற்றம் நிலவியுள்ளது. இதற்கு முன்பு, ராஷ்மிகா மந்தனா - அல்லு அர்ஜுனன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலை இவர் பாடி இருந்தார். இப்பாடல் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் ராஜலட்சுமி பாடிய பாடல் நீக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.