'முட்டாள்களோடு நடிக்கிறோமோன்னு தோணும்' - பிரபல நடிகர்களை கடுமையாக விமர்சித்த நடிகை வினோதினி..
தமிழ் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வினோதினி. எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக வலம் வருகிறார்.
அதிலும், OK கண்மணி, அப்பா, ராட்சசன், கோமாளி, கேம் ஓவர், சூரரை போற்று, பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. டாக்டர், பத்திரிக்கையாளர், வக்கீல் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் வினோதினி அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
அதில் பேசிய அவர், என்ன செய்தால் அஜித், கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் அவர்களது படத்தில் நடிக்க என்னை அழைப்பார்கள் என்று தெரியவில்லை. பல படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் அழைப்பார்கள். ஆனால் முன்னணி ஹீரோக்களுக்கு மட்டும் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், படப்பிடிப்பில் சில முன்னணி நடிகர்கள் பொறுப்பே இல்லாமல் இருக்கிறார்கள். நாளை ஒரு காட்சி இருந்தால் அதற்காக தயாராகாமல் சொதப்புவார்கள். அவர்களால் பல லட்சக்கணக்கில் செலவாகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது முட்டாள்களோடு தான் நடிக்கிறோமோ என்று நினைக்க தோன்றும் என்று வினோதினி தெரிவித்துள்ளார்.