‘மல்லிப்பூ கேக்குதா உனக்கு’.. சிம்பு நயனை ஒப்பிட்டு வெளுத்தெடுத்த விஜயலட்சுமி.. வைரலாகும் வீடியோ!
நடிகை விஜயலட்சுமி ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். இவர் சென்னையில் பிறந்து கர்நாடகாவில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து அங்கேயே நடிக்க ஆரம்பித்தார். பெரும்பாலும் கன்னட படங்களில் நடித்த விஜயலட்சுமி, பிரண்ட்ஸ் படத்திற்கு முன்னர் பூந்தோட்டம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். ராமச்சந்திரா, மிலிட்டரி, எஸ் மேடம், சூரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக சீரியலில் கூட வாய்ப்பில்லாமல் இருந்து வந்தது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு இருந்து வந்தார். அதே போல நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன்னை ஏமாற்றியதாக போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வருகிறது. அதே போல அடிக்கடி சீமான் குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் விஜயலக்ஷ்மி சமீபத்தில் சீமான் குறித்து விமர்சித்து மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடலை பாராட்டி சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நடிகர் சிலம்பரசன் நடிப்பில், பெருமைமிகு இசைத்தமிழன் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைத்து வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில், கவிஞர் தாமரை அவர்கள் எழுதி, பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற மல்லிப்பூ பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடுஇணையற்ற இசைத்தமிழன் அன்புஇளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதனை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.
அதில் ”உனக்கு மல்லிப்பூ கேட்குதா சீமான், நான் மட்டும் உண்மையை சொன்னால் எல்லாரும் உன்னை செருப்பால் அடிப்பார்கள். மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை, என்னுடைய கேஸ் மட்டும் வரட்டும் அப்போ இருக்கு உனக்கு. நீங்க எனக்கு என்ன பாவம் பண்ணுனீர்களோ அதைத்தான் சிம்பு சார் நயன்தாராவிற்கும் பண்ணினார். லிப் லாக் எல்லாம் செய்து அசிங்க அசிங்கமாக அவரை கொச்சைப்படுத்தி விட்டு அவரை விட்டு விட்டார். அந்த பொண்ணு பாவம் இப்போ விக்னேஷ் சிவனே நம்பி இருக்கிறது. நீங்களும் அவரும் ஒரே மாதிரி தான்’ என்று கூறியுள்ளார்.