'Fun ஷோ CWC'லயே Controversy உருவாக்க பாக்குறாங்க.. அது வேண்டவே வேண்டாம்'.. வித்யூலேகா அதிர்ச்சி வீடியோ
சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி. குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.
2 சீசன்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி. இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட். முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
மூன்றாவது சீசனில் வித்யுல்லேகா ராமன்,ரோஷ்னி ஹரிப்ரியன், ஸ்ருத்திகா அர்ஜுன், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், அந்தோணிதாசன், மனோபாலா, ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, சுனிதா, மணிமேகலை, முகம்மது குரைஷி, சக்தி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், சரத் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். குக் வித் கோமாளி 3ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.
தற்போது வைல்டு கார்டு நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட வித்யூலேகா நிகழ்ச்சியில் பேசியது குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். குக் வித் கோமாளி 3ம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார் நடிகை வித்யூலேகா. நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், தற்போது திருமணமாகி செட்டில் ஆகிவிட்ட நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். CWC 3ல் பைனல் வரை முன்னேறி இருக்கிறார்.
கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட வைல்டு கார்டு எபிசோடில் கிரேஸ் கருணாஸ் அவரது advantage பயன்படுத்தி முத்துகுமாரிடம் இருந்த sweet potatoவை வாங்கிக்கொண்டார். இதனால் முத்துக்குமார் டென்சன் ஆனார். அதை பற்றி கிரேஸ் கருணாஸ் “அவர் காண்டாகிட்டார்” என கூற.. அதற்கு வித்யூலேகா ‘ஆனால் ஆகட்டும், நீங்க போட்டியில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கீங்க, அவர் செமி பைனல் வரை வந்துவிட்டார். நீங்க அதை புரிஞ்சிக்கோங்க’ என கூறி இருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள், ‘வித்யூலேகாவுக்கு முத்துக்குமார் மேல என்ன கோபம்’ என கேட்டு வருகின்றனர். அதற்க்கு தற்போது இன்ஸ்டாகிராமில் பதில் அளித்த வித்யூலேகா, “அவர் மேல ஒரு சொட்டு நெகடிவ் பீலிங் கூட இல்லை. அவர் talented cook, பைனலிஸ்ட் ஆக வந்திருக்க வேண்டும் என்று கூட சொன்னேன். கிரேஸ் அக்காவை ஊக்கப்படுத்த தான் நான் அப்படி பேசினேன்” என கூறி இருக்கிறார்.
மேலும் அடுத்து பிக்பாஸ் வாய்ப்பு வந்தால் போவீங்களா என கேட்டதற்கு, “ஒரு fun ஷோ குக் வித் கோமாலியிலேயே controversy create பண்ண பாக்குறாங்க, பிக்பாஸ் எல்லாம் போனால்.. வேண்டவே வேண்டாம். நான் நல்லா இருக்கேன்” என கூறி இருக்கிறார்.
CWCல் Controversy create பண்ண ட்ரை பன்றாங்க.. - #Vidyullekha pic.twitter.com/dfR6jjtzZT
— Parthiban A (@ParthibanAPN) July 21, 2022