எனக்கும் இப்படி ஒரு அப்பா கிடைச்சிருந்தா.. கலங்கி பேசிய வனிதா விஜயகுமார்..!

தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறைகளாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் மறைந்த மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் தான் நடிகை வனிதா. இவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார். மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு சில மாதங்களில் விவாகரத்தும் பெற்றுக் கொண்டார். இதனிடையே பீட்டர் பால் உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார்.
இந்நிலையில், நடிப்பை தாண்டி பிசினஸில் அதிக கவனம் செலுத்தி வரும் வனிதா விஜயகுமார். தனது மகள் ஜோதிகாவையும் சினிமாவில் களமிறக்கி விட்டார். இந்த நிலையில், அந்தகன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வனிதா என்னை போன்ற எண்பதுகளில் பிறந்தவர்களுக்கு நடிகர் பிரசாந்த் பிடித்தமான ஹீரோ. கடந்த சில ஆண்டுகளில் எனக்கும் பிரசாந்துக்கும் இடையே உள்ள உருவான நட்பு மிகவும் மதிப்பு வாய்ந்தது. பிரசாந்த் அவருடைய அப்பாவிடம் இருந்து கடின உழைப்பு நேர்மை உள்ளிட்ட பல குணங்களை கற்றுக் கொண்டுள்ளார். எனக்கும் இப்படி ஒரு அப்பா இருந்தா போதும் என்று வனிதா எமோஷனலாக பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.