பிரபல தமிழ் பட நடிகருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாணி போஜன் ? அடுத்தகட்டமாக இருவரும் எடுத்த முடிவு !

விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த வாணி போஜன், சென்னை சில்க்ஸ் விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஓர் இரவு, அதிகாரம் 79 என்னும் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த வாணி போஜன், ஜெயா டிவியில் மாயா சீரியலில் நடித்தார்.
பின்னர், சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து இல்லத்தரசிகளின் மனங்களை கவர்ந்தார். இதற்கு பல விருதுகளை பெற்ற இவர், பின்னர் லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார். இவரது நடிப்புத் திறமை பார்த்து திரைபடவாய்ப்புகள் வர தொடங்கவே தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார்.
ஓ மை கடவுளே மீரா அக்கா கதாபாத்திரம் செம பேமஸ், லாக்கப், மலேஷியா டு அம்னிஷியா போன்ற திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது கைவசம் நிறைய திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரீஸ் என பிரபலம் பெற்ற இவர், தனது போட்டோ வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், வாணி போஜனை தேடி கதை கூற போகும் இயக்குனர்கள் அவருடன் நடிகர் ஜெய் எப்போதும் கூடவே இருப்பதாக தெரிவித்து வந்தனர். இருவரும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருந்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும், இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் சொல்லப்பட்டு சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டது.
ஜெய் வாணி போஜனுடன் இருப்பதால், வாணி போஜனிடம் கதை கூற இயக்குனர்கள் தயங்கி வருகிறார்களாம். இந்நிலையில், இப்படி பல வாய்ப்புகள் தட்டிபோவதால் வாணி போஜன் நடிகர் ஜெய்யை பிரேக்கப் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.